News August 25, 2025

நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்

image

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News August 25, 2025

இந்துக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: BJP

image

உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சி, பம்பையில் செப்.20-ல் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு CM ஸ்டாலினுக்கு, கேரள CM அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், பினராயி விஜயனும், ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில BJP தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். தமிழக CM-ம், அவரது பயனற்ற வாரிசும் பலமுறை இந்துக்களை அவமதித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News August 25, 2025

BREAKING: இரவில் திமுகவில் இணைந்தனர்

image

2026 தேர்தலையொட்டி, அதிமுகவும், திமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று மதியம் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த நிலையில், இரவில் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இணைப்பு விழா நடக்கிறது.

News August 25, 2025

Health Tips: வெறும் வயிற்றில் இத குடிங்க.. இவ்வளவும் சரியாகும்!

image

தினமும் எழுந்தவுடன் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இந்த 1 கிளாஸ் வெந்தய நீர் குடிப்பதால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன ▶சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ▶வயிற்று வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்றவற்றை குறைக்கிறது ▶கெட்ட கொழுப்புகள் குறையும் ▶சரும நிறத்தை மேம்படுத்தவும், முகப்பரு நீங்கவும் உதவுகிறது ▶நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

News August 25, 2025

EPS தான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்

image

ADMK, BJP மீண்டும் கூட்டணி அமைத்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ என்ற குரல் பாஜகவில் ஒலித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று EPS பேசியதால் குழப்பம் அதிகரித்தது. இந்நிலையில், NDA கூட்டணியின் தமிழக தலைவர் EPS தான், அவரே CM வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு பிறகு EPS எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

News August 25, 2025

வங்கி லோன்.. வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

image

வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முதல் முறை கடன் பெறும் பலர் இந்த சிக்கலால் தவித்த நிலையில் அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனாலும் கடன் பெறுவோரின் நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

உடலை வலுவாக்க உதவும் தனுராசனம்!

image

✦செரிமானத்தை அதிகரித்து, உடலை வலுவாக்க உதவுகிறது.
➥முகம் தரையை பார்க்கும்படி கை, கால்களை நீட்டியபடி படுத்துக் கொள்ளவும்.
➥மெதுவாக கால்களை பின்புறத்தில், மேல்நோக்கி உயர்த்தவும். அதே நேரத்தில், தலை & கைகளையும் உயர்த்தி, பின்னோக்கி நீட்டி, கால்களை பிடிக்கவும்.
➥உடலை வில் போல் வளைத்து பிடித்து, 15- 20 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.

News August 25, 2025

முதல்முறையாக பயிற்சியாளர் அவதாரம் எடுத்த கங்குலி

image

SA 20 லீக் தொடரில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே IPL-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இயக்குநராக இருந்த அவர் தொடர் தோல்வியால் வெளியேறினார். இந்தியாவுக்கு கேப்டனாக பல சாதனைகள் படைத்த கங்குலி, பயிற்சியாளராக தடம் பதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News August 25, 2025

சிங்கம் தூங்கக்கூடாது: விஜய்யை சாடிய சரத்குமார்

image

கள அரசியலில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் செல்லும் என்று விஜய் பதிலளித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சரத்குமார், இந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் போகுமாம், பின்பு படுத்து தூங்கி விடுமாம் என்று விமர்சித்துள்ளார். சிங்கம் சிங்கமாக இருக்க வேண்டும், தூங்கக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?

News August 25, 2025

நிறம் மாறும் விநாயகர்.. அற்புத கோயில்!

image

நாகர்கோவில் அருகே உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் அதிசய விநாயகர் கோயிலில், விநாயகரின் சிலை 6 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுகிறது. மார்ச் – ஜூனில் விநாயகர் கருப்பாகவும், ஜூலை – பிப்ரவரியில் விநாயகர் வெள்ளை நிறமாகவும் மாறுகிறார் என கூறப்படுகிறது. மேலும், கோயில் கிணற்றின் நீர், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது கருப்பாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது வெள்ளை நிறமாகவும் மாறுகிறதாம்.

error: Content is protected !!