News September 12, 2024

ரேஷன் கார்டு மூலம் ₹5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

மத்திய அரசின் PM-JAY திட்டத்தின்கீழ் ₹5 லட்சம் மதிப்பிலான இலவச <<14078906>>மருத்துவ காப்பீடு<<>> வழங்கப்படுகிறது. அதற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை அறிய https://www.pmjay.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, AM I Eligible ஆப்சனை க்ளிக் செய்யவும். பின் மொபைல் எண் மற்றும் CAPTCHAஐ உள்ளிட்டு, OTP சரிபார்ப்புக்குப் பிறகு உங்கள் தகவல்களை உள்ளிடவும். நீங்கள் தகுதியுடையவர் எனில், உங்கள் பெயர் ரிசல்டில் காட்டப்படும்.

News September 12, 2024

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

image

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், இன்று EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார்.

News September 12, 2024

தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்!

image

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான 11 மாதத்தில் 192 பேரின் உடல்களில் இருந்து 1,086 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

News September 12, 2024

ஆஃபர்களை அள்ளித்தரும் Flipkart

image

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் ‘Flipkart Big Billion Days – 2024’ விற்பனை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இருப்பினும் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் 29ஆம் தேதி முதல் சில சலுகைகளை அனுபவிக்க முடியும். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50-80% தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் பல அதிரடி சலுகைகளும் காத்திருக்கின்றன.

News September 12, 2024

பதவி விலகத் தயார்: மம்தா

image

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என நம்புவதாகவும் வேதனை தெரிவித்தார். மருத்துவர்கள் போராட்டம் முடியாததால், மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.

News September 12, 2024

இந்தியா – சீனா இடையே 75% பிரச்னைகளுக்கு தீர்வு: EAM

image

எல்லையில் இந்தியா – சீனா இடையிலான 75% பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து வருவது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருப்பதாகவும், கல்வான் மோதலுக்கு பின் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ராணுவத்தை குவித்து விட்டு, சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

FLASH: குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் செப்.14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்னரே வருமாறும், அதற்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வுக் கூடத்திற்கு எடுத்து வருமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதனை, www.tnpsc.gov.in, www.tnpscexams.in தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

News September 12, 2024

களத்தில் இறங்கிய Airtel.. மற்ற நிறுவனங்கள் முன்வருமா?

image

ஏர்டெல் CEO கோபால் விட்டல், ஜியோ, BSNL, வோடஃபோன் -ஐடியா, டாடா டெலிசர்வீஸ் நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். Spam அழைப்புகள் மூலம் மோசடிகள் நடைபெறுவதை தடுக்க, டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இணைப்புகள் குறித்த தரவுகளை மாதந்தோறும் அனைவரும் பகிர்ந்தால், அதைக் கண்காணித்து மோசடிகளை தடுக்க முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News September 12, 2024

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

image

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதியில் தென்கொரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது இந்தியா. இன்றைய ஆட்டத்தின்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது 200வது கோலை அடித்தார். செப்.14ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

News September 12, 2024

ஜப்பானில் ரிலீஸாகும் ஜவான்

image

‘ஜவான்’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் ₹1,100 கோடி வசூலித்தது. ராணுவ தளவாட கொள்முதலில் ஊழல் என்ற இப்படத்தின் புதுமையான கதைகளம் வெற்றிக்கு உதவியது. படித்தவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுங்கள் என படம் பேசிய அரசியலை, நமது அரசியல் தலைவர்களும் எதிரொலித்தனர்.

error: Content is protected !!