News October 26, 2024

புதிய THEME உடன் களைகட்டும் தவெக மாநாடு!

image

விக்கிரவாண்டியில் ‘புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்’ என்ற கருத்துருவில் (தீம்) தவெக மாநாடு நடைபெறவுள்ளது. கட் அவுட்களில் உள்ள ஒவ்வொரு தலைவர்களின் கொள்கை வாசகங்களும் மாநாட்டுத் திடலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநாட்டையும் ஒவ்வொரு கருத்துருவில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. தவெகவின் கொள்கையை மையப்படுத்தியே நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

News October 26, 2024

ALERT: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அங்கு Yellow அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதுரையில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2024

சீமானுக்கு தலைவலி கொடுக்கும் முன்னாள் தம்பிகள்

image

சீமான் மீதான அதிருப்தியில் நாதகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து தற்போது புதிய இயக்கமொன்றை கண்டிருக்கின்றனர். ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் போல திமுக, அதிமுக என எந்தப் பக்கமும் தாவிடாமல், தனித்து செயல்பட அவர்கள் முடிவெடுத்திருப்பது சீமானுக்கு தலைவலியாக மாறியுள்ளது. சீமானுக்கு எதிராக அவர்கள் பல அஸ்திரங்களை ஏவுவார்கள் என்று இணையத்தில் களமாடும் முன்னாள் தம்பிகள் ஆருடம் கூறுகின்றனர்.

News October 26, 2024

விஜய்யை சீண்டிய விசிக எம்.எல்.ஏ

image

அரசியலில் வெற்றிபெற வாய்ப்பே இல்லாதவர்கள், வேறு வழியில்லாமல் அவசரப்பட்டு நடிகர் விஜய்யுடன் போகலாம் என்று விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார். திமுகவுக்கு எதிர் அரசியலை த.வெ.க தீவிரமாக கையிலெடுத்தால் அதிமுகவுக்கு அதோகதிதான் ஏற்படுமெனக் கூறிய அவர், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். மேலும், முரண்பாடுகள் இல்லாத, முறியாத கூட்டணி என்ற ஒன்று அரசியலில் இல்லை எனவும் தெரிவித்தார்.

News October 26, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14457065>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) டென்மார்க் 2) ஷா கமிஷன் 3) Old Pension Scheme 4) 27 ஆண்டுகள் 5) கில்கமெஷ் 6) சிரிப்பு & உடலில் அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய படிப்பு 7) 6,805 km. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 26, 2024

தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள் யார்?

image

தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட்பிரபு, சதீஷ், பிரேம்ஜி, ஸ்ரீநாத், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்களாம்.

News October 26, 2024

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு உணவுகளை ஆர்டர் செய்து கொடுக்கும் வசதியை ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி வெளிநாட்டில் ஸ்விகி செயலியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, UAE உள்ளிட்ட 27 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

News October 26, 2024

செக் வைக்கும் நோக்கில் IT ரெய்டுகள் நடக்கிறதா?

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை EPS முடுக்கி விட்டுள்ள நிலையில், அவரது நிழலாக கருதப்படும் இளங்கோவனை குறிவைத்து IT ரெய்டுகள் நடந்தேறியுள்ளன. அதிமுகவில் தனியாவர்த்தனம் செய்யும் EPS-இன் ஒற்றைத் தலைமையை டெல்லி முக்கியஸ்தர்கள் ரசிக்கவில்லை என அறியமுடிகிறது. இதன் காரணமாகவே அவருக்கு பக்கபலமாக நிற்கும் சிலருக்கு செக் வைக்க இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 26, 2024

முகக் கொழுப்பை கரைக்க 5 சூப்பர் டிப்ஸ்!

image

1) கொழுப்பை கரைக்கும் ஆற்றல் தண்ணீருக்கு அதிகம். நாளொன்றுக்கு 2 லி இளஞ்சூட்டில் வெந்நீர் குடியுங்கள். 2) முக மசாஜ் மற்றும் முகத் தசைகளை அசைக்கும் பயிற்சிகள் நல்ல ரிசல்ட் கொடுக்கும். 3) குக்கீஸ், பாக்கெட் உணவுகளை ஒழியுங்கள். 4) 45 நிமிட வாக்கிங் கட்டாயம். 5) மன அழுத்தத்தால் சுரக்கும் கார்டிசோலின் ஹார்மோன், கொழுப்பை முகத்தில் படியச் செய்கிறது. எனவே, மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

News October 26, 2024

BREAKING: இன்று 5 மாவட்டங்களில் கனமழை!

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கிறது. இந்நிலையில், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!