India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
கமலால் நிராகரிக்கப்பட்டு, பிறகு மற்ற நடிகர்கள் நடிப்பில் வெளியாகி 4 படங்கள் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளன. அதாவது, அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன், ஜென்டில்மேன், ரஜினி நடித்த எந்திரன், ஹிந்தி படம் மெயின் ஹுன் நா ஆகியவையே அப்படங்கள் ஆகும். இந்த படங்களில் நடிக்க கமலையே முதலில் படக்குழு அணுகியுள்ளது. அவர் மறுத்ததால், அர்ஜுன், ரஜினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வெளியிடவுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்தும், தனக்கு ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அதில் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்ததையடுத்து இன்று தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம் என்று கூறப்படுகிறது. இதை ஆண்கள் சொல்லலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த மந்திரமே ஆண்களுக்கானது என்று காஞ்சி மஹா பெரியவர் தெரிவித்துள்ளார். அதை ஆண்கள் சொன்னால் அவர்கள் குடும்ப பெண்களுக்கும் அது கவசமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்த நாளிலேயே சித்த சுத்தி உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.
பலருக்கு கழுத்தை சுற்றிலும், அக்குள் பகுதியிலும் மருக்கள் காணப்படும். கிருமியால் ஏற்படும் இந்த மருவை கிள்ளி விட்டால், பல இடங்களில் பரவி விடும். சிறிது சுண்ணாம்பு எடுத்து, அதன் மீது நீரை விட்டு குலைக்க வேண்டும். பிறகு, வெற்றிலை காம்பை எடுத்து அதன் முனையை கையால் நசுக்கி, அதை அந்த சுண்ணாம்பில் தொட்டு மருக்கள் மீது வைக்க வேண்டும். இப்படி 7 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் மறைந்து விடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள். SHARE IT
கோவையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “விஸ்வகர்மா மிகச் சிறப்பான திட்டம். இதில் எந்த சாதியும் இல்லை. மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காக இத்திட்டத்தை தமிழக அரசு முடக்குகிறது” என்றார். காலணி செய்தல், முடித்திருத்துதல் உள்ளிட்ட கைத்தொழில்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே விஸ்வகர்மா திட்டம். ஆனால், குலக்கல்வியை புகுத்துவதாக கூறி இதனை தமிழக அரசு அமல்படுத்த மறுக்கிறது.
குரூப் 2 தேர்வுக்கு காலை 9 மணிக்கு முன்பாகவே தேர்வறைக்கு செல்ல வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 8.15 மணிக்கெல்லாம் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஹால்டிக்கெட் மறக்க வேண்டாம். காலையில் அவசர அவசரமாக படிக்க வேண்டாம். மனதை ரிலாக்சாக்க பாடல்களை கேளுங்கள். தேர்வுக்கு முன்பு தயிர் – சர்க்கரையை கலந்து சாப்பிடுங்கள். இது மூளையையும் சுறுசுறுப்பாக்கும். உடலுக்கும் தெம்பு கொடுக்கும்.
வெறும் 475 மி.லி. கூல்டிரிங்ஸில் 51 கிராமுக்கு மேல் Added Sugar உள்ளது. இது மிக அதிக சர்க்கரை அளவாகும். மேலும், அதிகப்படியான நிறச் சாயங்களும், பாஸ்பேட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே கூல்டிரிங்ஸை தொடர்ந்து குடித்து வருபவருக்கு சர்க்கரை நோய் நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் உடல் பருமன், குடல் பிரச்சினை, பல் எனாமல் அரிப்பு, கிட்னி பாதிப்பு ஆகியவை கொசுறாக வந்து சேருமாம்.
இன்று (செப். 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.