India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒதுக்கீடு நிறைவடைந்தது. இந்நிறுவனம் ₹6,560 கோடிக்கு <<14064860>>IPO<<>> வெளியிட்ட நிலையில், சுமார் ₹3 லட்சம் கோடி அளவிலான விண்ணப்பங்கள் குவிந்தன. இது வரலாற்றின் மிகப்பெரிய IPO என்ற பெருமையைப் பெற்றது. இதனிடையே, பங்கு ஒதுக்கீடு நிறைவடைந்த நிலையில், Refund நடைமுறை தொடங்கியுள்ளது. IPO விலையை விட டபுள் விலையில் இதன் பங்குகள் பட்டியலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, கமல் என இரு ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், தனது வேறுபட்ட நடிப்பால் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் நவரச நாயகன் கார்த்திக். காதல், கோபம், நகைச்சுவை, சோகம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனி முத்திரை பதித்த தமிழ் சினிமாவின் அமரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
தமிழக பாஜகவில் 10 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுதும் 1 கோடி பேரை சேர்க்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கான முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வணிகர் சங்கம் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவை உரிமை கோரும் விவகாரத்தில் ஓபிஎஸ் அமைதி காப்பது அவர் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பின்பு ADMK விவாகரத்தில் தீர்வு ஏற்படும் என நம்பி இருந்தார். ஆனால் நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இதனால் அமைதியாகி விட்டதாகத் தெரிகிறது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் யோசனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
‘கோலி சோடா’ வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் 2014இல் வெளியான ‘கோலி சோடா’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2018இல் அதன் 2ஆம் பாகம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் ஷாம், சேரன், ரம்யா நம்பீசன், அபிராமி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், படத்தில் நடித்த சிறுவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
13ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்கிறது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை சிட்டி – மோகன் பகான் அணிகள் மோதவுள்ளனர். சென்னையின் எப்.சி. தனது முதல் லீக்கில் நாளை ஒடிசா எப்.சி.யை சந்திக்கிறது
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டுள்ளார். விமானம் மூலம் நாளை மாலை அவர் சென்னைக்கு வரவுள்ளார். தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளியில் சிக்கி இதுவரை 226 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி மணிக்கு 149 கிமீ வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். ‘யாகி’ வியட்நாமில் இந்த நூற்றாண்டின் வீசிய மிக பயங்கரமான புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி சிறப்பு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், அவர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவோண பூஜைக்காக செப்.15, 16இல் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் சத்யா விருந்து வழங்கப்படும். செப்.21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
விண்வெளியில் அமெரிக்க கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் நடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அவரும், அந்நிறுவனத்தின் இன்ஜீனியர் சாரா கெல்லிஸ் உள்ளிட்ட மூவர் சென்றனர். பின்னர் புவி சுற்றுவட்ட பாதைக்கு சென்றதும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து ஜாரெட் சுமார் 15 நிமிடங்கள் நடந்தார். இதன்மூலம் வரலாற்றில் விண்வெளியில் நடந்த முதல் கோடீஸ்வரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
Sorry, no posts matched your criteria.