News September 13, 2024

டயட் லிஸ்டில் துவரம் பருப்பை விட்டுவிடாதீர்கள்..!

image

சமச்சீர் உணவுப் பட்டியலில் துவரம் பருப்பு நிச்சயம் இருக்க வேண்டுமென Nutritionist கூறுகின்றனர். வயிற்றுக்கு கெடுதலே செய்யாமல், உடலுக்கு வலுவூட்டும் துவரை, ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. செரிமான சக்தி அதிகரிக்கும், காயங்களை விரைந்து குணமாக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றி, தொற்றுகளை அழிக்கும் என்கிறார்கள். மேலும், ரத்த சோகையைக் குணப்படுத்தி, தசைகளுக்கு வலிமை கொடுக்குமாம். Share it.

News September 13, 2024

வானில் பறக்க தயாராகுங்கள்: PM மோடி

image

இந்தியாவில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் விமானத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஏர் டாக்ஸியில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றார். இது விமானப் போக்குவரத்துத் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும், இதன் மூலம் வானில் பறக்க வேண்டும் என்ற பலரது கனவு நிறைவேறும் எனவும் கூறினார்.

News September 13, 2024

70 வயதானோருக்கு காப்பீடு! ஒரு வாரத்தில் அமல்

image

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதானோருக்கும் ₹5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் முடிவு இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோரிக்கையை அடிப்படையாக கொண்ட திட்டம் இது என்றும், திட்ட பயனை பெற விரும்புவோர் அதற்கான தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், முகப்பதிவும் பதிவேற்ற வேண்டுமென அத்தகவல்கள் கூறுகின்றன.

News September 13, 2024

தொடர் விடுமுறையையொட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

வார விடுமுறை, மிலாடி நபி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 995 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு 190 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

News September 13, 2024

உலக நாயகனே..! Social Media ஜாம்பவான் ரொனால்டோ

image

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் இன்ஸ்டா, FB, X, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மொத்தமாக 100 கோடி Followerகளை கொண்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதிகபட்சமாக இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி Followerகளை கொண்டுள்ளார். வீதிகளில் இருந்து உலகின் மிகப் பெரிய இடத்திற்கு உயர்த்தியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

“Goodbye, USA!” : முதல்வர் ஸ்டாலின்

image

USA பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், “Goodbye, USA!” என தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 17 நாள் பயணமாக கடந்த 27ஆம் தேதி USA சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ₹7,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், அங்குள்ள தமிழர்களை சந்தித்து சிறப்புரையாற்றினார். USA பயணத்தை நிறைவு செய்த அவர், நாளை காலை சென்னை திரும்பவுள்ளார்.

News September 13, 2024

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்?

image

தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். இதில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் தற்போது ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

News September 13, 2024

EPS மீது ராஜேந்திர பாலாஜி அதிருப்தி?

image

EPS மீது ADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ADMK-வில் விருதுநகர் மாவட்டத்தை அமைப்பு ரீதியில் பிரிப்பதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள அவர், அண்மையில் EPS கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

News September 13, 2024

நாளை TNPSC குரூப் 2 முதல்நிலை தேர்வு

image

2,327 காலியிடங்களுக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. சார்-பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வர்கள் 1 மணி நேரம் முன்னரே வர வேண்டும், ஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News September 13, 2024

இந்தியாவின் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் ரெடி

image

இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை முக்கிய நகரங்களில் இயக்க ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் 16ம் தேதி முதல் குஜராத் மாநிலம் புஜ் – அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இது முழுவதும் AC வசதி கொண்டது. முதலில் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. SHARE IT

error: Content is protected !!