News October 26, 2024

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு உணவுகளை ஆர்டர் செய்து கொடுக்கும் வசதியை ஸ்விகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி வெளிநாட்டில் ஸ்விகி செயலியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, UAE உள்ளிட்ட 27 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

News October 26, 2024

செக் வைக்கும் நோக்கில் IT ரெய்டுகள் நடக்கிறதா?

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை EPS முடுக்கி விட்டுள்ள நிலையில், அவரது நிழலாக கருதப்படும் இளங்கோவனை குறிவைத்து IT ரெய்டுகள் நடந்தேறியுள்ளன. அதிமுகவில் தனியாவர்த்தனம் செய்யும் EPS-இன் ஒற்றைத் தலைமையை டெல்லி முக்கியஸ்தர்கள் ரசிக்கவில்லை என அறியமுடிகிறது. இதன் காரணமாகவே அவருக்கு பக்கபலமாக நிற்கும் சிலருக்கு செக் வைக்க இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 26, 2024

முகக் கொழுப்பை கரைக்க 5 சூப்பர் டிப்ஸ்!

image

1) கொழுப்பை கரைக்கும் ஆற்றல் தண்ணீருக்கு அதிகம். நாளொன்றுக்கு 2 லி இளஞ்சூட்டில் வெந்நீர் குடியுங்கள். 2) முக மசாஜ் மற்றும் முகத் தசைகளை அசைக்கும் பயிற்சிகள் நல்ல ரிசல்ட் கொடுக்கும். 3) குக்கீஸ், பாக்கெட் உணவுகளை ஒழியுங்கள். 4) 45 நிமிட வாக்கிங் கட்டாயம். 5) மன அழுத்தத்தால் சுரக்கும் கார்டிசோலின் ஹார்மோன், கொழுப்பை முகத்தில் படியச் செய்கிறது. எனவே, மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

News October 26, 2024

BREAKING: இன்று 5 மாவட்டங்களில் கனமழை!

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கிறது. இந்நிலையில், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

News October 26, 2024

Recipe: கன்னிகாபுரம் முயல்கறி செய்வது எப்படி?

image

மிளகாய் தூள், மஞ்சள், மல்லி, சீரகம், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு இவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். அதை முயல்கறி துண்டுகள் மீது தடவி, 30 நிமிடம் மரினேட் செய்யவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம் வேகும் வரை நன்கு வதக்கவும். பின்னர் அதில் முயல்கறியை போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்தால் சுவையான கன்னிகாபுரம் முயல்கறி ஃப்ரை ரெடி.

News October 26, 2024

தேர்வு எழுத தேவையில்லை… நேரடி அரசு வேலை!

image

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள கெளரவ விரிவுரையாளர், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து, நவ.4இல் திண்டுக்கல்லில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம். கல்வித்தகுதி: ஆங்கிலத்தில் M.A (55%) M.Ed, Ph.D, SLET/NET தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>GGRI<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 26, 2024

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: CM ஸ்டாலின்

image

மதுரையில் தேங்கிய மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும், பொறியாளர்களும், பணியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டதோடு, 20 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 26, 2024

காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் 9 நன்மைகள்!

image

1) காப்பர் தீமை செய்யும் பாக்டீரியா, வைரஸ்களை ஒழிக்கும் தன்மை கொண்டது. 2) காப்பர் பாட்டிலில் நீர் அருந்துவது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 3) காயங்களை விரைவாக ஆற்றும். 4) தலை முடி ஆரோக்கியமாக வளரும். 5) Metobolism அதிகரிக்கும். 6) இதயம் மற்றும் மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். 7) மூட்டுகளை வலுப்படுத்தும். 8) ஹார்மோன் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும். 9) இரும்புச் சத்தை உடல் உறிய உதவும்.

News October 26, 2024

லோகேஷ் கொடுத்த LCU அப்டேட்..

image

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கென தனியொரு சினிமாடிக் யூனிவர்சை (LCU) உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இந்த LCU உருவாவதற்கு முன் என்ன நடந்தது என்பதை 10 நிமிட குறும்படமாக உருவாக்கி அதற்கு சாப்டர் ஜீரோ எனப் பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.

News October 26, 2024

$736 மில்லியன் ஒப்பந்தம் அதானி கைவிட்டு போனதா?

image

அதானி எனர்ஜி நிறுவனத்திற்கும் கென்யா அரசின் KETRACOக்கும் இடையிலான பவர் லைன் ஒப்பந்தத்தை அந்நாட்டின் நீதிமன்றம் தடை செய்துள்ளது. மின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பவர் லைன்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் $736 மில்லியன் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது. இதை எதிர்த்து அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!