India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக RMC தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 15 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் RMC கூறியுள்ளது. SHARE IT
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க லெமன் ஜூஸ் நல்லதுதான். இருப்பினும் அளவுக்கு அதிகமாக லெமன் ஜூஸ் குடிப்பது அழற்சி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 2-3 கிளாஸ் அளவு வரை மட்டுமே லெமன் ஜூஸ் அருந்த வேண்டும். சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடாது. செம்பு பாத்திரங்களில் லெமன் ஜூஸை வைத்து குடிக்க கூடாது. லெமன் ஜூஸ் குடித்த பின் வாய்கொப்பளிப்பது பற்களின் ஈறுகளைப் பாதுகாக்கும்.
CPM மூத்த தலைவர் ஜெயராஜனின் 2 ஆண்டுகால இண்டிகோ விமான சபதத்தை சீதாராம் யெச்சூரி முடித்து வைத்துள்ளார். அதாவது, விமானத்தில் தகராறு செய்ததாக, ஜெயராஜனுக்கு 2 வாரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவன விமானத்தில் இனி பயணிப்பதில்லை என அவர் சபதமிட்டார். இந்நிலையில், யெச்சூரியின் மறைவு செய்தி அறிந்து, வேறு வழியின்றி அந்நிறுவன விமானத்தில் அவர் டெல்லி சென்றார்.
பி.எட். படிப்புகளுக்கு செப். 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ITI அட்மிஷனுக்கான காலக்கெடு நீட்டிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே, இருமொழி கொள்கை அண்ணா காலத்தில் இருந்து செயல்படுத்தி வருவதாகவும், NEPஇல் உள்ள திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பே தாங்கள் அவற்றை நடைமுறைபடுத்தி விட்டதாகவும் கூறினார்.
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள் என்பது தற்போது கண்கூடாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், நேற்று அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் தனிப்பட்ட முறையில் உரையாடிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது எடுத்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவினர் செயலுக்காக சீனிவாசனிடம் வருத்தம் கேட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சென்னை அடுத்த மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆலையை ஃபோர்டு நிறுவனம் மூடியது. இந்நிலையில், ஏற்றுமதிக்கான கார்கள் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தானாக முன்வந்து நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ என்ன சாப்பிட்டார் என்பதை பொதுவெளியில் கூறலாமா என நிதியமைச்சர் ஹோட்டல் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை, யார் எடுத்தார்கள் என்று தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வணங்கான் படத் தலைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கிய அந்தப் படத்தில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத் தலைப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சரவணன் என்பவர் தொடுத்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த ஐகோர்ட், பாலா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு தேவையற்ற அழைப்புகள் (Spam calls) வருவது அதிகரித்து வருகிறது. விளம்பரம், மோசடி நோக்கங்களுடன் அடிக்கடி வரும் ஸ்பேம் கால்களை தடுக்க ஆன்ராய்டு போனில் டு நாட் டிஸ்டர்ப் (DND) ஆப்சனை பயன்படுத்துகின்றனர். இதனால் டெலிவரி பாட்னர்களின் அழைப்பையும் தவற நேரிடும் என்பதால், தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவில் (NCPR) உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து வைத்தால் டெலிமார்கெட்டிங் ஸ்பேம் காலை தடுக்கலாம்.
Sorry, no posts matched your criteria.