News October 26, 2024

அட.. ENGLISH ரொம்ப ஈஸிதான் பாஸ்!

image

தினமும் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வாக்கியங்களை அமெரிக்கா, பிரிட்டன் மக்கள் (Native Speakers) எப்படி பேசுவார்கள் என்று பார்க்கலாம். 1) நான் சும்மா உட்காந்துட்டு இருக்கேன் – I am Sitting Idle. 2) இது என்னோட சொந்த வீடு – I Own This House. 3) நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் – I Made A Mistake. 4) தயிரை கடைந்தால் மோராக மாறும் – When You Churn Curd, It Turns Into ButterMilk. Share It.

News October 26, 2024

அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திடுவோம்: விஜய்

image

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, விஜய் அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நமது தொண்டர்கள் மாநாட்டுக்கு வரும் வழியில் மிக கவனமாக இருக்க வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது. உங்கள் பாதுகாப்பை எண்ணியபடிதான், மாநாட்டுக்கு வருவேன். அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” எனக் கூறியுள்ளார்.

News October 26, 2024

காற்றின் மொழிதான் தரக் குறியீடு!

image

➤0-50: குறைவான தாக்கம். ➤51-100: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று சிரமம் இருக்கும். ➤101-200: இதயம், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விட சிரமமாக இருக்கும். ➤201-300: நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும். ➤301-400: சுவாச நோய்கள் ஏற்பட கூடும். ➤401-500: ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கெனவே நோயுடன் இருப்பவர்களை தீவிரமாக பாதிக்கும்.

News October 26, 2024

சிம்புவுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்!

image

சிம்பு படத்தில் நடிக்க மீனாட்சி செளத்ரி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்நிலையில், ‘சிங்கப்பூர் சலூன்’, ‘கொலை’, ‘G.O.A.T’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த மீனாட்சி செளத்ரி இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்‌ஷன், ரொமான்டிக் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.

News October 26, 2024

FLASH: ₹59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

image

நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹7,360க்கும், சவரன் ₹58,880க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ₹107ஆக தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் விலை ₹59,000-ஐ நெருங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News October 26, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடியை கொண்ட நாடு எது? 2) எமர்ஜென்சி குறித்து உண்மைக் கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? 3) OPS என்பதன் விரிவாக்கம் என்ன? 4) நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்? 5) ஜெலோடோலாஜி என்றால் என்ன? 6) எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது? 7) தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 26, 2024

அஸ்வினுக்கு மாற்று சுந்தர் அல்ல: மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

image

IND டெஸ்ட் அணியில் அஸ்வின் வாரிசாக வாஷிங்டன் சுந்தரை கருதக்கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். NZ எதிரான 2வது டெஸ்டில் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இது ஒரு போட்டி மட்டுமே. அஸ்வினின் வாரிசாக தன்னை நிரூபிக்க அவர் இன்னும் நிறைய மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸ்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், அஸ்வினுக்கு மாற்றாக இன்னொரு வீரரை கண்டுபிடிப்பது எளிதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

முதலீட்டாளர்களே எச்சரிக்கையோடு இருங்க!

image

சென்செக்ஸ் ஒரே மாதத்தில் 6,600 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தை மேலும் சரிய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். அதே நேரம், சந்தை சரிவை பயன்படுத்தி நல்ல நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது சிறுக சிறுக வாங்கவும் பரிந்துரைக்கின்றனர்.

News October 26, 2024

ரயில் பயணத்தில் ஆபத்தா? இந்த நம்பரை வெச்சிக்கோங்க

image

ரயில் பயணம் இனிமையானது என்றாலும், அதில் ஆபத்துகளும், அசம்பாவிதங்களும் அதிகம். தண்டவாளத்தில் கால் மாட்டிக் கொள்வது, கொள்ளையர்கள் புகுவது, நமது சீட்டில் வேறு நபர்கள் அமர்ந்து எழ மறுப்பது, ரயிலில் இருந்து கீழே விழுவது, நகைகள் ஜன்னல் வழி விழுவது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கலாம். இதுபோன்ற சமயங்களில் 139 என்ற எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னால் போதும். 5 நிமிடத்தில் நமக்கு உதவ போலீஸ் வந்துவிடும்.

News October 26, 2024

ஹாலிவுட் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதி

image

‘The Arrangements of Love’ நாவலை மையமாகக் கொண்டு உருவாகிவந்த ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து நடிகை ஸ்ருதிஹாசன் திடீரென்று விலகியுள்ளார். பாப்டா விருது பெற்ற இயக்குநர் பிலிப் ஜான் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தது பிடிக்காததால், அவர் விலகியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதியும் இப்படத்தில் இருந்து விலகியதால் வேறு நடிகையை படக்குழு தேடி வருகிறது.

error: Content is protected !!