News September 13, 2024

செயற்கை மழையை உருவாக்க மத்திய அரசு திட்டம்?

image

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை மழையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் மழையை பொழிய வைக்கவும், அதிகமாக மழை பெய்யும் இடத்தில் நிறுத்தி வைக்கவும், இடி, மின்னல்களை செயற்கையாக உருவாக்கவும் இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக 18 மாதத்தில் cloud chambers தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 13, 2024

சேவல் எந்த நாட்டின் தேசிய பறவை?

image

ஒவ்வொரு நாடும் அதற்கென தேசிய விலங்கு அல்லது பறவையை கொண்டுள்ளது. அண்டை நாடான இலங்கையின் தேசிய பறவையாக காட்டுசேவல் உள்ளது. அந்நாட்டின் காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழும் இச்சேவல், முன்னர் சிலோன் காட்டுக்கோழி என்று அழைக்கப்பட்டது. இதன் நீளம் 35 செ.மீ, எடை 510-645 கிராம் இருக்கும். இலங்கையைத் தவிர, ஐரோப்பிய நாடான ஃபிரான்சின் தேசியப் பறவை கூட காலிக் சேவல் என்ற ஒரு வகை காட்டுச் சேவல் தான்.

News September 13, 2024

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

image

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

News September 13, 2024

தேச விரோதிகளுக்கு எதிராக போராடுவேன்: கெஜ்ரிவால்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கிடைத்ததையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 6 மாத சிறைவாசத்திற்கு பின் இன்று வெளியே வந்தார். தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களை சந்தித்துள்ளேன், என்னை சிறையில் அடைத்தாலும் மேலும் வலுப்படுவேன்” என்றார்.

News September 13, 2024

பிரபல பாடிபில்டர் மாரடைப்பால் மரணம்

image

உலகின் பயங்கரமான பாடிபில்டர் என அழைக்கப்படும் இலியா கோலெம் (36) காலமானார். கடந்த 6ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. பெலாரஸைச் சேர்ந்த இவரை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். ரசிகர்கள் இவரை ‘The Mutant’ என செல்லமாக அழைக்கின்றனர். 154 கிலோ எடையும், 6.1 அடி உயரமும், 61 இன்ச் மார்பும், 25 இன்ச் பைசெப்ஸும் கொண்டிருந்தார்.

News September 13, 2024

மாதுளையால் ஏற்படும் நன்மைகள்

image

தினசரி ஒரு மாதுளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம். ▶ மன அழுத்தம் குறையும். ▶ தோல் புற்றுநோயையும் தடுக்க உதவும். ▶ எலும்புகளை வலுப்படுத்த உதவும். ▶ அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுக்கும். ▶ வயோதிகத்தைத் தள்ளிப் போடுகிறது. ▶ செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். ▶ உடல் எடை குறைக்கவும், டைப் 2 வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும். ▶ கர்ப்பப்பை ஆரோக்கியத்தைக் காக்கும்.

News September 13, 2024

இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்

image

ESPN நிறுவனம் நிபுணர் குழுவின் உதவியுடன் 21ஆம் நூற்றாண்டில் சிறந்த டெஸ்ட் பவுலர்கள் யார்? என்ற பட்டியலை தயாரித்துள்ளது. அதில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்டெய்ன் முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் (ENG), பும்ரா (IND), கம்மின்ஸ் (AUS), ரபாடா (SA), ஸ்டூவர்ட் பிராட் (ENG), டிரென்ட் போல்ட் (NZ) வெர்னான் பிலாண்டர் (SA) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். உங்கள் சாய்ஸ் யார்?

News September 13, 2024

பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

image

ஆவணி மாத கடைசி முகூர்த்த தினமான (செப்.16) திங்கட்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 13, 2024

Flipkart Big Billion Days-க்கு வந்த சோதனை

image

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் உள்ளூர் வியாபார சந்தை விதிகளை மீறியுள்ளதை இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (CCI) கண்டுபிடித்துள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு, தங்கள் தளங்களில் அந்நிறுவனங்களுக்கு முன்னுரிமை தருவதும் தெரியவந்துள்ளது. Flipkart Big Billion Days-க்கு சிறிது நாள்களே இருக்கும் நிலையில், 1,696 பக்க அறிக்கையை CCI சமர்ப்பித்துள்ளது.

News September 13, 2024

முக்கிய ஊர்களின் முந்தைய பெயர்கள்

image

பாஜக அரசு மாற்றிய ஊர்களின் புதிய பெயர்கள்.
ராஜமுந்திரி- ராஜமகேந்திரவரம் (ஆந்திரா, 2015)
குர்கான் – குருக்ராம் (ஹரியானா, 2016)
அலகாபாத் – பிரக்யாராஜ் (UP, 2018)
நியூ ராய்ப்பூர் – அடல் நகர் (சத்தீஸ்கர், 2018)
ஹோஷங்காபாத் – நர்மதாபுரம் (MP, 2021)
அவுரங்காபாத் – சத்ரபதி சம்பாஜிநகர் (மகாராஷ்டிரா, 2023)
உஸ்மானாபாத் – தாராஷிவ் (மகாராஷ்டிரா, 2023)
போர்ட் பிளேயர் – ஸ்ரீ விஜயபுரம் (A&N, 2024)

error: Content is protected !!