News October 26, 2024

முத்ரா கடன் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு

image

முத்ரா யோஜனா கடன் திட்ட உச்ச வரம்பு ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2015இல் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு, நடுத்தர மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு ₹10 லட்சம் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அதன் உச்சவரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற எந்த சாெத்தையும் அடகு வைக்க தேவையில்லை.

News October 26, 2024

ஷமிக்கு மீண்டும் இடமில்லை.. IPL 2025-லிலும் சந்தேகம்

image

2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகம்மது ஷமி, அதன்பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் பெயர் இல்லை. இது ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் பந்துவீச்சில் பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது. உடற்தகுதியின்மையே அவர் சேர்க்கப்படாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. IPLலிலும் அவர் விளையாடுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.

News October 26, 2024

BREAKING: ஈரானில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை

image

ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக அந்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில், டெஹ்ரானில் தங்கள் நாட்டு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் ஈரான் தரப்பில் தகவல் இல்லை.

News October 26, 2024

டைவர்ஸ் தெரியும்.. ஸ்லீப் டைவர்ஸ் தெரியுமா?

image

மனம் முடித்த தம்பதியினர் கருத்து வேறுபாடு ஏற்படின் சட்டப்படி பிரிவது விவாகரத்து அல்லது டைவர்ஸ் எனப்படுகிறது. அதே நேரத்தில், ஒன்றாக வாழும் போதிலும் படுக்கையில் தனித்தனியே விலகி தூங்குவது, தனித்தனி அறையில் தூங்குவது ஸ்லீப் டைவர்ஸ் என கூறப்படுகிறது. வளரும் குழந்தைகள் முன்பு ஒன்றாக தூங்க விரும்பாதது, வேலை அலுப்பால் அதிகம் தூங்க விரும்புவதே ஸ்லீப் டைவர்ஸுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

News October 26, 2024

டானா புயல் பலி: ஒடிசாவில் ஜீரோ, மே.வங்கத்தில் 2

image

டானா தீவிர புயல் கரையை கடந்ததன் காரணமாக ஒடிசாவில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், மேற்குவங்கத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். எனினும், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய 2 மாநிலங்களிலுமே டானா தீவிர புயல் காரணமாக ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட ரயில், விமானம், பேருந்து சேவைகள், புயல் கரையை கடந்ததும் உடனடியாக சேவைகளை தொடங்கின.

News October 26, 2024

அணுஆயுத மிரட்டல்களை ஏற்க முடியாது: இந்தியா, ஜெர்மன்

image

அணுஆயுதத் தாக்குதலையோ (அ) மிரட்டலையோ ஏற்க முடியாது என்று இந்தியாவும், ஜெர்மனியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ், மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா- உக்ரைன் இடையே நீடிக்கும் போருக்கு கவலை தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதம் எந்த வடிவில் இருப்பதையும் அனுமதிக்க முடியாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

News October 26, 2024

இந்தியாவுடன் நட்பு.. பாக்.கிற்கு பரூக் வலியுறுத்தல்

image

வன்முறையை நிறுத்திவிட்டு, இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தும் வழியை பாக். கண்டுபிடிக்க வேண்டுமென என்.சி. கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். குல்மார்க் தீவிரவாத தாக்குதலில் 4 பேர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் ஆகாது. அப்படியிருக்கையில் ஏன் இதை அவர்கள் செய்கிறார்கள்? எங்கள் எதிர்காலத்தை பாதிக்கவா? எனக் கேள்வியெழுப்பினார்.

News October 26, 2024

4G-க்கு மாற விரும்பாத 15 கோடி 2G வாடிக்கையாளர்கள்

image

15 கோடி 2G வாடிக்கையாளர்கள், 4G-க்கு மாற விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இன்னும் சுமார் 20 கோடி பேர் வரை 2G சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 5 கோடி பேர் வரை 4G-க்கு மாற வாய்ப்புள்ளது என்றும், எஞ்சிய 15 கோடி பேர் மாற வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 4G மொபைல் விலை, மாதாந்திர கட்டணம் ஆகியவை அதிகம் என அவர்கள் கருதுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

News October 26, 2024

வரும் முதலீட்டை எதுவும் நிறுத்த முடியாது.. நிர்மலா உறுதி

image

இந்தியா வரும் முதலீட்டை எதுவும் நிறுத்த முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனியார் முதலீடு செய்யாத துறையே இல்லை. விண்வெளி, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளிலும் தனியாரை இந்தியா அனுமதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் சிவப்பு கோடு இல்லை, சிவப்பு கம்பள விரிப்பு வரவேற்பே முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News October 26, 2024

இந்திரா காந்தியின் பொன்மொழிகள்

image

* தன் உரிமைகளை கோருபவர்கள், என்றும் தன் கடமையை மறக்கக் கூடாது *உலகில் இரண்டே மனிதர்கள்தான் உள்ளனர். ஒன்று, வேலை செய்பவர்கள். இரண்டு, அதற்கான மரியாதையை ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள் * எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை
* கல்வி கற்பதும், கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதேநேரத்தில் சிறந்த மனிதனை உருவாக்குபவையாக அவை அமைய வேண்டும். SHARE IT.

error: Content is protected !!