News September 14, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் போட்டோ அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 14, 2024

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

image

பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம். ▶ கண்களைப் பாதுகாக்க உதவுகிறது. ▶ புற்றுநோய், இதய நோய் மற்றும் அல்சைமர் நோய்களின் பாதிப்பை குறைக்கிறது. ▶ உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். ▶ ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். ▶ கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

News September 14, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶குறள் எண்: 52 ▶குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். ▶பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

News September 14, 2024

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

image

காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று இரவு பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அங்கு தீவிரவாதிகளை ராணுவம் வேட்டையாடி வருகிறது.

News September 14, 2024

சிறுமியிடம் சில்மிஷம்: அடித்தே கொன்ற குடும்பத்தினர்

image

பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை அந்த சிறுமி, பெற்றோரிடம் கூறவே, அவர்களும், மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார் (34) என்பது தெரியவந்தது.

News September 14, 2024

முதலில் விசிகவினரை திருத்துங்கள்

image

விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “திருமாவளவன் முதலில் அவரது கட்சிக்காரர்களிடம் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இனி விசிகவினர் யாரும் குடிக்கக் கூடாது என தீர்மானம் கொண்டு வாங்க. குறைந்தபட்சம், மது ஒழிப்பு மாநாட்டுக்காவது யாரும் குடித்துவிட்டு வரக்கூடாது என உத்தரவு போடுங்க” எனக் கூறினார்.

News September 14, 2024

அர்ஜுனா சொல்வது இதற்குத் தானா…

image

மழைக் காலங்களில் இடி இடிக்கும் போது, அதனால் காதில் உள்ள செவிப்பறை பாதிப்படைய வாய்ப்புண்டு. எனவே அர்ஜுனா… அர்ஜுனா… என்று சொல்லும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலி இரண்டு பக்கமும் சென்று செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

News September 14, 2024

தெரிந்த பழமொழி.. தெரியாத அர்த்தம்..!

image

ஏதாவது பிரச்னை என்றால், “புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று” என்ற பழமொழியை கிண்டலாக சொல்லிவிட்டு சிகரெட் புகைப்பவர்கள் ஏராளம். ஆனால் இது உண்மை அல்ல. புண்பட்ட நெஞ்சை “புக” விட்டு ஆற்று என்பதுதான் உண்மையான பழமொழி. வாழ்க்கையில் பிரச்னை என்றால், புதிய விஷயங்களில் மனதை புகவிட்டு சரியாக்கிக் கொள் என்பதே இதன் அர்த்தம். புக என்பது புகை என மாறியதால் அதன் அர்த்தமே மாறிவிட்டது என்பதுதான் வேதனை.

News September 14, 2024

உயிரைப் பணயம் வைக்கும் உணவு

image

ஜப்பானில் கிடைக்கும் ஃபுகு என்ற மீன் உணவு மிகவும் ஆபத்து வாய்ந்ததாகும். பாபர் பிஷ் எனும் மீனை கொண்டு இந்த உணவு சமைக்கப்படுகிறது. விஷயம் என்னவென்றால், இந்த மீனின் உடலில் 30 மனிதர்களை கொல்வதற்கான விஷம் உள்ளதாம். நிபுணத்துவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் மட்டுமே இந்த உணவு சமைக்கப்படுகிறது. சமைக்கும் போது சிறு பிழையை ஏற்படுத்தினால் கூட மரணம் உறுதி.

News September 14, 2024

க்ரீம் பன் வீடியோவை நீக்கிய அன்னபூர்ணா!

image

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லாத போது, அதில் உள்ள க்ரீமுக்கு மட்டும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் ஸ்ரீனிவாசன் முறையிட்டார். இதன் தொடர்ச்சியாக, அன்னபூர்ணாவின் எக்ஸ் தளத்தில் க்ரீம் பன் வீடியோ வைக்கப்பட்டது. இந்நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீனிவாசன் மன்னிப்பு கோரியதை அடுத்து, அந்த வீடியோவையும், நிர்மலா சீதாராமன் ஹேஷ் டேக்கையும் அன்னபூர்ணா நீக்கியது.

error: Content is protected !!