India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*செஸ் ஒலிம்பியாட்: சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. *ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. *டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப்1 சுற்றில் இந்தியா-சுவீடன் மோதும் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. *AUS அணிக்கு எதிரான டி20 தொடரின் 2ஆவது போட்டியில் ENG அணி வெற்றி பெற்றது.
திருப்பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட ஏகாதசித் திருநாளில் திருமாலை வணங்கினால் கோடி நன்மைகள் வந்து சேரும் என்பது வைணவக்குரவர்கள் கூற்று. சிறப்பு வாய்ந்த சர்வ ஏகாதசியான இன்று காலையிலேயே குளித்து, திருமண் இட்டு, பெருமாளுக்கு விரதமிருந்து, மாலை கோயிலுக்குச் சென்று விஷ்ணுவுக்கு துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் பாடி, நெய் தீபமேற்றி வணங்கினால், நோயற்ற வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று RMC தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. அதேபோல், நாளை முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. SHARE IT
ராக்கெட் பெண்மணி என அழைக்கப்படும் வனிதா முத்தையா சந்திரயான் 2 திட்ட இயக்குநராக கவனம் ஈர்த்தார். சென்னையைச் சேர்ந்த அவர், கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். சுமார் 35 ஆண்டுகளாக இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய வனிதா முத்தையா, கார்ட்டோசாட்-1, ஓசியன்சாட்-2, மேகா- ட்ரோபிக்ஸ் உள்ளிட்ட பல திட்டங்களில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 2006இல் சிறந்த பெண் அறிவியலாளருக்கான விருதைப் பெற்றார்.
USA பயணத்தை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார். 17 நாள் பயணமாக கடந்த 27ஆம் தேதி USA சென்ற அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் ₹7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், அங்குள்ள தமிழர்களை சந்தித்து உரையாடினார். பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்ட நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு அவர் சென்னை வருகிறார்.
*ரஷ்யா: இங்கிலாந்து தூதரக ஊழியர்கள் 6 பேரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ரஷ்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. *நேபாளம்: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பால் நேபாளத்தில் 12 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா:அதிபர் தேர்தலில் மதுரோ வென்றதாக அறிவித்த அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உள்பட 16 பேர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இத்தாலி: ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு போப் வாடிகன் திரும்பினார்.
முன்னாள் CM ஓபிஎஸ்-ஐ தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார். இதில் அவருக்கு சாதகமான முடிவு கிடைக்க செய்து, எம்பி ஆக்கிவிட்டு, பிறகு கட்சியில் சேர்க்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார்?. கமெண்ட் pls
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் TNPSC குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. அதற்காக கல்வி நிறுவனங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, இன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பள்ளி செல்வோரின் பெற்றோருக்கு SHARE பண்ணுங்க
ஆசியாவின் மிகப் பழமையான டுராண்ட் கோப்பை கால்பந்துப் போட்டி இந்தியாவில் தான் நடைபெறுகிறது என உங்களுக்குத் தெரியுமா?. 1888ஆம் ஆண்டு முதன்முதலில் சிம்லாவில் தொடங்கிய டுராண்ட் கோப்பை, உலகின் மூன்றாவது பழமையான கால்பந்து போட்டியும் கூட. இதுவரை 133 சீசன் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி நடப்பு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
சங்க காலப் பாடல்களில் ஊன்துவை அடிசில் என்று குறிப்பிடப்பட்ட சொல்லுக்கு உங்களுக்கு பொருள் தெரியுமா?. ஊன் என்றால் இறைச்சி, துவை என்பது கலந்த தன்மை, அடிசில் என்பது சமைக்கப்பட்ட உணவு என பொருள். ஆம் நாம் விரும்பி உண்ணும் பிரியாணி தான் சங்க காலத்தில் ஊன்துவை அடிசில் என வழக்கத்தில் இருந்துள்ளது. பிரியாணி என்பது பிற்காலத்தில் வந்ததே. உங்களுக்குத் தெரிந்த தமிழ் சொற்களை கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.