India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்களை தெரிந்து கொள்வோம்.
1) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்
2) மலச்சிக்கலை போக்கி, செரிமானத்தை சீராக்கும்
3) அதிக ரத்த அழுத்தத்தை பீட்ரூட் ஜூஸ் குறைக்க வழிவகுக்கும்
4) சர்மத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
SHARE IT.
மொபைலிற்கு வரும் லிங்குகளை கிளிக் செய்யும்போது, அது நமக்கே தெரியாமல் மொபைலை முடக்கவும், பணத் திருட்டு போன்றவற்றுக்கும் வித்திடுவதாக NSA எச்சரிக்கிறது. இதேபோல் மர்ம செயலிகளும் பணத்தை திருடுகின்றன. இத்தகைய மோசடியில் தப்ப மொபைல் போனை வாரம் ஒருமுறை Reboot செய்ய NSA பரிந்துரைகிறது. அவ்வாறு செய்தால், மர்ம லிங்குகள், செயலிகள் செயல்படாது என NSA கூறுகிறது. SHARE IT.
இரவில் தங்களது அறைக்கு வருமாறு ஹீரோக்கள் அழைத்ததாக ஹிந்தி நடிகை மல்லிகா செராவத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மர்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அண்மையில் படப்பிடிப்புக்காக துபாய் சென்றபோது, அந்தப்பட ஹீரோ தனது அறை கதவை தட்டியதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, ஹிந்தி ஹீரோக்கள் சிலர் இரவில் அவர்களின் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் “டானா” தீவிர புயலுக்கு இடையே 2,201 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. புயலையொட்டி 4,859 கர்ப்பிணிகள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2,201 பேர் குழந்தை பெற்றெடுத்தனர். இதில் 18 ஜோடிகள் இரட்டை குழந்தை ஆகும். 1,858 குழந்தைகள் இயற்கையாக பிறந்ததாகவும், 343 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கஜினி 2ஆம் பாக படத்தை எடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். வெற்றி படங்களின் 2ஆம் பாகத்தை எடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கஜினி படத்தின் 2ஆவது பாகம் குறித்து சூர்யா தகவல் வெளியிட்டுள்ளார். கஜினி 2ஆவது பாகத்தை எடுக்கலாமா என தயாரிப்பாளர் கேட்டதாகவும், அதற்கு தாம் சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக புனேயில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒருவேளை தோல்வியடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெறுமா, பெறாதா என சந்தேகம் நிலவுகிறது. இந்தாண்டில் இந்தியா இன்னும் 6 டெஸ்ட் (நியூசி 1, ஆஸி 5 போட்டிகள்) போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் குறைந்தது 3 போட்டிகளில் இந்திய அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்
முதல்வர் ஸ்டாலின் அண்மையில் பேசியபோது, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஜோசியக்காரர் போல பேசி வருவதாக சாடியிருந்தார். இதுகுறித்து பேசிய இபிஎஸ், தன்னை ஜோசியக்காரர் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாகவும், ஆனால் தனது ஜோசியம் 2026இல் பலிக்கும் என்றும் தெரிவித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கும் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
முத்ரா யோஜனா கடன் திட்ட உச்ச வரம்பு ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2015இல் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு, நடுத்தர மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு ₹10 லட்சம் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அதன் உச்சவரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற எந்த சாெத்தையும் அடகு வைக்க தேவையில்லை.
2023 ஒருநாள் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகம்மது ஷமி, அதன்பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் பெயர் இல்லை. இது ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் பந்துவீச்சில் பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது. உடற்தகுதியின்மையே அவர் சேர்க்கப்படாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. IPLலிலும் அவர் விளையாடுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.
ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக அந்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில், டெஹ்ரானில் தங்கள் நாட்டு போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் ஈரான் தரப்பில் தகவல் இல்லை.
Sorry, no posts matched your criteria.