News September 14, 2024

விசிக எங்கள் எதிரி இல்லை: அதிமுக

image

விசிக, தங்கள் எதிரி கட்சி இல்லை என்று அதிமுக கூறியுள்ளது. விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய அதிமுக Ex மினிஸ்டர் ஜெயக்குமார், விசிக தங்கள் எதிரி அல்ல, திமுக, பாஜகவே எதிரிகள் என கூறினார். 2026 தேர்தலில் விசிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என இப்போது கூற முடியாது, தேர்தலின்போதே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

News September 14, 2024

மகளிர் உரிமைத் தொகை: நாளை முக்கிய அறிவிப்பு?

image

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கும் அத்திட்டத்தின்கீழ் 1.15 கோடி பேர் பயனடைகின்றனர். நாளையுடன் அந்தத் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், புதுமண தம்பதிகள் உள்ளிட்டோரையும் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

News September 14, 2024

ஜெயம் ரவி விவாகரத்தின் பின்னணி இதுவா?

image

ஜெயம் ரவி, தனது மனைவியை பிரிய எடுத்த முடிவுக்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மாமியாரும், மாமியார் தோழியான சீனியர் நடிகை ஒருவரும் சில ஆண்டுகளாக அவரின் செயல்பாடுகளை நோட்டம் பார்த்ததாகவும், இதனால் அதிருப்தியில் இருந்த ஜெயம் ரவி, இனிமேலும் நிம்மதியை தொலைக்க கூடாது என்று விவாகரத்து முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கமெண்டை பதிவிடுங்க.

News September 14, 2024

கேப்டனாக ‘தல’ தோனி பொறுப்பேற்ற நாளின்று!

image

‘தல’ தோனி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாள் இன்று. சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு 14 செப். 2007 அன்று பொறுப்பேற்ற அவர், இந்திய அணிக்கு புது உத்வேகத்தை அளித்தார் என்றே சொல்லலாம். அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்த அவரது கேப்டன்ஸியில் T20 WC 2007, ICC Test 2010,
CB தொடர் 2008, சாம்பியன்ஸ் லீக் T20 2010 & 2014, ஆசிய கோப்பை 2010 & 2016, ODI WC 2011 உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா வாகை சூடியது.

News September 14, 2024

JOB அலெர்ட்: SBI-யில் 2,000 இடங்களுக்கு வேலைவாய்ப்பு

image

SBI வங்கியில் 2,000 P.O. அதிகாரிகள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவலை www.sbi.co. in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 14, 2024

குறைவான தீமையை தேர்ந்தெடுங்கள்: போப்

image

USA அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்பை போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். இருவரில் அமெரிக்க கத்தோலிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். குடியேறியவர்களை திருப்பி அனுப்புதல், கருக்கலைப்புக்கு ஆதரவு உள்ளிட்ட விவகாரங்களில், இருவரையும் போப் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் 5.2 கோடி கத்தோலிக்கர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: IND VS PAK இன்று மோதல்

image

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் IND VS PAK இன்று மோதுகின்றன. சீனாவில் நடைபெறும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா, தனது முதல் 4 போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 5ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இப்போட்டி மதியம் 1.15 மணிக்கு தொடங்குகிறது. Sports Ten 1, Sony Sports Ten 3 ஆகிய சேனல்களில் இந்த போட்டியை காணலாம்.

News September 14, 2024

அட்ஜஸ்ட்மென்ட் செய்யாததால் நீக்கப்பட்டேன்: கஸ்தூரி

image

மலையாள சினிமாவை போல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல் பிரச்னை அதிகம் இருப்பதாக ராதிகா, குஷ்பு போன்ற சீனியர் நடிகைகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகை கஸ்தூரி கூறுகையில், “எனது 2-வது படத்திலேயே டைரக்டர் என்னிடம் தவறாக அணுகினார். கோபத்தின் உச்சிக்கு சென்ற நான், அவரை பயங்கரமாக திட்டினேன். அதனால் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்” எனக் கூறினார்.

News September 14, 2024

அன்னபூர்ணா விவகாரம்: இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

image

அன்ன்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் இன்று மதியம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. .கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்.

News September 14, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 3) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது? 4) உலகில் முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது? 5) கிரிகோரியன் நாட்காட்டியை போப் கிரிகோரி XIII எப்போது அறிமுகப்படுத்தினார்? 6) ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

error: Content is protected !!