India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி சிபிஎம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நேரில் அஞ்சலி செலுத்தினர். யெச்சூரி மறைவுக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேற்கு சீனாவின் குலியா பனிப்பாறையில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஓஹியோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 3 பெரும் காலநிலை மாற்றங்களில் இருந்து தப்பிய 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய அவற்றின் DNAவை மெட்டஜெனோமிக் பகுப்பாய்வு செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளனர். புவி வெப்பமயமாதல் காரணமாக பனி உருகுவது வேகமெடுத்தால் நோய்க்கிருமிகளின் பரவல் அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
மூளை, இனப்பெருக்க உறுப்பு உள்ளிட்ட முக்கியமான மனித உறுப்புகளில் NanoPlastics (0.5%) குவிந்து வருவதாக நியூ மெக்ஸிகோ பல்கலை., ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் உள்ள பாலிஎதிலீன் துகள்கள் அதிகளவு மனித உணர்திறன் திசுக்களில் குவிந்து கிடக்கின்றன. அதன் தீய விளைவுகளை உலகளாவிய அவசரநிலையாக கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை சரிந்துள்ளது. கடந்த வெங்காயத்தை ₹35க்கு மானியத்துக்கு விற்கும் திட்டத்தை மத்திய அரசு 5ஆம் தேதி கொண்டு வந்தது. இதன் எதிரொலியாக, வெங்காயம் விலை சரிவை சந்தித்துள்ளது. டெல்லியில் 1 கிலோ வெங்காயம் ₹55ஆகவும், மும்பையில் ₹56ஆகவும் சரிந்துள்ளது. சென்னையில் 1 கிலோ வெங்காயம் விலை ₹58ஆக குறைந்துள்ளது என மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்திற்கு நேரில் சென்று, முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கனமழையில் இரவு முழுவதும் போராட்டம் நடத்தியதால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும், முதல்வராக அல்ல.. சகோதரியாக வந்திருக்கிறேன், இப்படி செய்யாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப், கமலா ஹாரிஸிடையே முதல் விவாத நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. விவாதத்திற்குப் பின் CNN நடத்திய கருத்துக்கணிப்பில், 63% பேர் கமலாவையும் 37% பேர் ட்ரம்பையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். 2016 தேர்தலுக்கு முன்பு பின்னடைவை சந்தித்த ட்ரம்ப் இறுதியில் வென்றது போலவே இம்முறையும் வெல்வார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
82 வேலிடிட்டி கொண்ட புதிய மலிவு கட்டணத் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹485 கட்டணத்தை ரிசார்ஜ் செய்தால், தினமும் தலா 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அழைப்பு வசதியோடு சேர்த்து, தினமும் 100 எஸ்எம்எஸ் அளிக்கிறது. BSNL செயலியிலும், அதன் இணையதளத்திலும் இந்தத் திட்டம் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யலாம் என BSNL தெரிவித்துள்ளது. SHARE IT.
படித்த இளைஞர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளார். மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டு அனைவரும் சைவமாக மாற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மக்களுக்கு பணம் கொடுத்தால் வாக்களிப்பார்கள் என்ற நிலையை அனைவரும் ஒன்றிணைந்து, மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு அடுத்த 6 வேலை நாட்களில் வெளியாகும் என TNPSC தலைவர் பிரபாகர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் 2 அல்லது 3 மாதங்களில் நிறைவடையும் என்றும், விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2,327 காலியிடங்களுக்கு இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா, கதுவா, கிஸ்துவார் பகுதிகளில் 3 இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.