News September 14, 2024

முதல் ODI கிரிக்கெட் மேட்ச் எங்கு நடந்தது?

image

மெல்போர்னில் 5 ஜனவரி 1971 அன்று AUS – ENG இடையே நடந்த ஆட்டமே உலகின் முதல் ODI ஃபார்மெட் போட்டியாக கருதப்படுகிறது. வானிலை காரணமாக 3ஆவது டெஸ்ட் நடத்த முடியாமல் போனது. இதனால் போட்டியை கைவிட முடிவு செய்த இருதரப்பும், கூட்டத்தை திருப்திப்படுத்தவும், நிதி இழப்பை சரி செய்யவும் அதற்கு பதிலாக, 40 ஓவர் கொண்ட (White Kit, Red Ball) ஒரு நாள் ஆட்டத்தை விளையாடினர். இதில் AUS 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

News September 14, 2024

ஹெலிகாப்டர் சுற்றுலாவை நிறுத்த வேண்டும்: அன்புமணி

image

கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் ஏற்படும் இரைச்சல் மக்களுக்கும், பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தனியார் நடத்தும் இந்த சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

News September 14, 2024

JUST NOW: சமையல் எண்ணெய் விலை உயருகிறது?

image

மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் எக்ஸ் பக்க பதிவில், உள்ளூர் விவசாயிகளின் விளைப் பாெருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 0%இல் இருந்து 20%ஆக அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக, நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News September 14, 2024

சற்றுமுன்: 129 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

image

அண்ணா பிறந்தநாளை ஒட்டி அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையை சேர்ந்த 100 பேருக்கும், சீருடை பணியாளர்கள் 29 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்படவுள்ளன. மேலும், தாமிரபரணி வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை மீட்ட தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி ஊழியர்கள் மந்திரமூர்த்தி, ராமசந்திரன் ஆகிய இருவருக்கு தீயணைப்பு பணிக்கான வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

BREAKING: தமிழக அரசு ஆலோசனை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மழை காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

News September 14, 2024

மூலிகை: மன அழுத்தத்தைக் குறைக்கும் ஓரிதழ் தாமரை

image

மனதளவில் சோர்வுற்றவர்களை தேற்றும் ஆற்றல் ‘ரத்தனபுருஷ்’ எனும் ஓரிதழ் தாமரைக்கு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. கொமரின், டிரைடெர்பினாய்ட்ஸ், ஆல்கலாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதனை (முழுத் தாவரத்தையும்) பொடி செய்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பாலில் கலந்து 48 நாட்கள் பருகிவந்தால், மன அழுத்தம் நீங்குவதோடு தேகத்துக்குப் பொலிவையும் கொடுக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News September 14, 2024

கம்பீர் மிகவும் மென்மையானவர்: பியூஷ்

image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கம்பீர் மைதானத்திற்கு வெளியே மென்மையானவர். திறமையான வீரர்களுக்கு எப்போதுமே உறுதுணையாக இருப்பார். திறமை இருப்பதாக உணர்ந்தால், வீரர்களை ஊக்கப்படுத்துவதோடு சுதந்திரமாக விளையாடச் சொல்வார் என்றார்.

News September 14, 2024

அப்துல் ரகுமான் ராஜினாமா ஏற்பு: புதிய தலைவர் யார்?

image

வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கு கடந்த 2021இல் தமிழக அரசு இந்த பொறுப்பை வழங்கியது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக.19இல் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வக்பு வாரியத்தின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News September 14, 2024

வியட்நாமில் புயலுக்கு பலி 254ஆக அதிகரிப்பு

image

வியட்நாம் நாட்டில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது. புயலில் சிக்கி காணாமல் போன 48 பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பலி உயர்ந்துள்ளது. மேலும் 82 பேரை காணவில்லை என்பதால், பலி உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. யாகி புயலால் வியட்நாம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

News September 14, 2024

17ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

வருகிற 17ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மிலாது நபி பண்டிகை வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 17ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளுக்கும் வருகிற 17ம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!