India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது தொடர்பான வீடியோ வெளியானதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார். மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, திருமாவளவனே அதுகுறித்து விளக்கமளித்து விட்டார் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் வெற்றி அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது தாம் 19 நிறுவனங்களுடன் ரூ.7,618 கோடி முதலீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்ததாக கூறினார். இந்த முதலீடு மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் செப்.14-ம் தேதி தேசிய இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, இந்தி அறிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து 1918 முதல் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி என்ற அடிப்படையில் 1949-ம் ஆண்டு செப்.14-ல் இந்தியை அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜக எதிர்ப்பை கடைபிடிக்கும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவசியமில்லை, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளிவந்து ஓராண்டுதான் ஆகிறது என்று அவர் பதிலளித்தார். திராவிட கட்சிகள் வளரலாம், மதவாத சக்திகள் வளரக் கூடாது என்றும் கூறினார்.
தனக்கு முடி வெட்டிய சவர தொழிலாளிக்கு ராகுல் காந்தி பரிசு அனுப்பியுள்ளார். கடந்த மே 13 ஆம் தேதி UP-யில் பரப்புரை செய்த அவர், பிரிஜேந்திர நகரில் உள்ள சலூனில் முடி திருத்தம் செய்தார். இது நடந்து 4 மாதம் ஆன நிலையில், தனக்கு முடி திருத்தம் செய்தவருக்கு 2 நாற்காலி, மேஜை, இன்வெர்ட்டரை பரிசாக அனுப்பியுள்ளார். ராகுலின் பரிசு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சலூன் கடைக்காரர் குறிப்பிட்டுள்ளார்.
17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தில், 19 நிறுவனங்களிடம் ₹7,618 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 250 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Deputy Manager உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: B.E., B.Tech. பணி அனுபவம்: 3 ஆண்டுகள். வயது: அதிகபட்சம் 40. தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 28. கூடுதல் தகவல்களுக்கு இணைய <
விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ அப்டேட் இன்று வெளியாகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இது நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
2,327 காலியிடங்களுக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு இன்று நடக்கிறது. 2,763 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 7.93 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுபவர்கள் 1 மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் எனவும், ஃபோன், கைக்கடிகாரம், மோதிரம், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
4ஆவது தெற்காசிய (U20) ஜூனியர் தடகள போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 30 வகை பந்தயங்கள் கொண்ட இந்த போட்டியில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்கள் வாரி குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இலங்கை (35) 2ஆவது இடத்தையும், வங்கதேசம் (3) 3ஆவது இடத்தையும் பெற்றன. பாக்,, பூடான் நாடுகள் வெறுங்கையுடன் நாடு திரும்பின.
Sorry, no posts matched your criteria.