News September 14, 2024

அன்னபூர்ணா விவகாரம்: இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

image

அன்ன்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் இன்று மதியம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. .கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பங்கேற்கிறார்.

News September 14, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 3) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது? 4) உலகில் முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது? 5) கிரிகோரியன் நாட்காட்டியை போப் கிரிகோரி XIII எப்போது அறிமுகப்படுத்தினார்? 6) ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 14, 2024

தங்கம் விலை ₹55 ஆயிரத்தை நெருங்கியது

image

தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ₹6,825, 1 சவரன் தங்கம் ₹54,600க்கும் விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் விலை ₹40 உயர்ந்து ₹6,865ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ₹320 அதிகரித்து ₹54,920ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹97க்கும், கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹97,000க்கும் விற்கப்படுகிறது.

News September 14, 2024

சாதனைத் தமிழன்: நாப்கின் முருகானந்தம்

image

2014இல் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார் ‘பத்மஸ்ரீ’ முருகானந்தம். ஒரு காலத்தில் வசதி வாய்ந்த பெண்களுக்கான பொருளாக இருந்த நாப்கினை ஏழை பெண்களும் பயன்படுத்தும் வாய்ப்பை (₹2) இந்த Pad Man உருவாக்கியுள்ளார். இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்களின் சுகாதாரத்திற்காக தனது சொந்த கண்டுபிடிப்பான இயந்திரங்களை வழங்கி, உற்பத்தி முறைகளையும் கற்றுத் தருகிறார்.

News September 14, 2024

TNPSC குரூப்-2 தேர்வு தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, 2ஏ தேர்வை TNPSC நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. 7.93 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

கதை கேட்காமல் ஒப்புக்கொண்ட அருண் விஜய்

image

6 மாதத்திற்கும் மேல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் படவாய்ப்பு இல்லாமல் அருண் விஜய் இருந்துள்ளார். இந்நிலையில் அவரை நடிகர் தனுஷ் அணுகி, தான் இயக்க இருக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கக் கேட்டதாக கூறப்படுகிறது. ராயன் படத்தின் வெற்றியால் தனுஷின் மார்க்கெட் எகிறிப்போய் இருப்பதை அருண் விஜய் பார்த்துள்ளார். இதையடுத்து கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

News September 14, 2024

நாட்டு சர்க்கரை பற்றிய தவறான புரிதல்..

image

வெள்ளை சர்க்கரை ரத்தத்தில் உடனடியாக கலக்கும். நாட்டு சர்க்கரை மெதுவாக கலக்கும். அவ்வளவுதான். ஆனால், நாட்டு சர்க்கரை சாப்பிட்டால் சுகர் ஏறாது என்ற தவறான புரிதல் சர்க்கரை நோயாளிகளிடம் உள்ளது. அதனால் காபி, டீயில் 2, 3 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து குடிக்கின்றனர். இது ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரையை மட்டுமே சர்க்கரை நோயாளிகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.

News September 14, 2024

Finance Tips: கடனில் சிக்காமல் தவிர்ப்பது எப்படி?

image

▶50/30/20 விதியைப் பயன்படுத்தி பட்ஜெட் போடுங்கள். 50% தேவைகளுக்கு, 30% விருப்பங்களுக்கு, 20% சேமிப்புக்கு. ▶செலவை அறிய, வாரந்தோறும் பட்ஜெட்டை சரிபார்க்க வேண்டும். ▶அத்தியாவசியம் இல்லாதவற்றுக்கு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். ▶பொருட்களை வாங்குவதற்கு அவசர நிதியை பயன்படுத்த வேண்டாம். ▶ஒவ்வொரு மாதமும் முழுமையாகச் செலுத்தக்கூடிய தொகைகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டை பயன்படுத்தவும்.

News September 14, 2024

வேட்டையன் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன் தெரியுமா?

image

வேட்டையன் பாடல் வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஜினிகாந்தே காரணம் என்றும், அவர் கேட்டதாலேயே ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. விஜய் கட்சி மாநாட்டிற்கு பிறகு பாடல் ரிலீசை வைக்கலாம் என கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாட்டில் விஜய் ஏதேனும் தன்னை மறைமுகமாக விமர்சித்தால் பதிலடி கொடுக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News September 14, 2024

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி இன்று பரப்புரை

image

பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் தேர்தல் பரப்புரை செய்யவுள்ளார். தோடாவில் நடக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். 1982க்கு பிறகு தோடா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் BJP 43 இடங்களில் போட்டியிடுகிறது. 370 சட்டப்பிரிவு ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில், செப்.18இல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

error: Content is protected !!