India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மேஷம் – மேன்மை உண்டாகும் *ரிஷபம் – வெற்றி அமையும் *மிதுனம் – சுகமான நாளாக அமையும் *கடகம் – போட்டி உருவாகும் *சிம்மம் – சுபம் உண்டாகும் *கன்னி – செல்வம் வந்து சேரும் *துலாம் – வரவு இருக்கும் *விருச்சிகம் – முயற்சி நன்மை தரும் *தனுசு – உயர்வு ஏற்படும் *மகரம் – கவலை உண்டாகும் *கும்பம் – லாபம் கிடைக்கும் *மீனம் – ஜெயம் ஏற்படும்.
ஒடிசாவில் அரசு உதவித் தொகையை பெறுவதற்காக மனைவியின் நகையை அடகு வைத்த அவலம் நடந்துள்ளது. ஆதார் எண் OTP அவசியம் என்பதால், நுவாகடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் ஒருவர், மனைவியின் நகையை அடகு வைத்து மொபைல் வாங்கியுள்ளார். அரசு உதவி செய்வது நல்லது தான், ஆனால் ஏழைகளாகிய தங்களுக்கு இவ்வளவு நிபந்தனைகளை பூர்த்தி செய்வது சிரமமாக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். 2024 – 2025 ஆம் ஆண்டுக்கு சென்னை மெட்ரோ திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காததை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக விமர்சித்துள்ளார். மேலும், சென்னை மெட்ரோ திட்டத்திற்காக மத்திய அரசின் பாங்கான ₹7,425 கோடியை வழங்க வலியுறுத்தியுள்ளார்.
தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட 10, 12ம் வகுப்பு சான்றிதழானது, தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு, பணி நியமனத்திற்கு இச்சான்றிதழ் தகுதியானது என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் மத்திய அரசால் இப்பள்ளி நிறுவனம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள ஒரு பள்ளியில் 46 இரட்டையர்கள், 2 ட்ரிப்லட்ஸ், ஒரே மாதிரி தோற்றமுடைய 20க்கும் மேற்பட்டவர்கள் படிப்பது தெரியவந்துள்ளது. செய்தியாளர் ஒருவர் இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் பள்ளி முதல்வருக்கே இது தெரியவந்ததாம். டேட்டாவை ஆய்வு செய்தபோது வியப்பாக இருந்ததாகவும், குழப்பத்தை தவிர்க்க வெவ்வேறு பிரிவுகளில் மாணவர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை மழையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் மழையை பொழிய வைக்கவும், அதிகமாக மழை பெய்யும் இடத்தில் நிறுத்தி வைக்கவும், இடி, மின்னல்களை செயற்கையாக உருவாக்கவும் இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக 18 மாதத்தில் cloud chambers தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாடும் அதற்கென தேசிய விலங்கு அல்லது பறவையை கொண்டுள்ளது. அண்டை நாடான இலங்கையின் தேசிய பறவையாக காட்டுசேவல் உள்ளது. அந்நாட்டின் காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழும் இச்சேவல், முன்னர் சிலோன் காட்டுக்கோழி என்று அழைக்கப்பட்டது. இதன் நீளம் 35 செ.மீ, எடை 510-645 கிராம் இருக்கும். இலங்கையைத் தவிர, ஐரோப்பிய நாடான ஃபிரான்சின் தேசியப் பறவை கூட காலிக் சேவல் என்ற ஒரு வகை காட்டுச் சேவல் தான்.
தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கிடைத்ததையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 6 மாத சிறைவாசத்திற்கு பின் இன்று வெளியே வந்தார். தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களை சந்தித்துள்ளேன், என்னை சிறையில் அடைத்தாலும் மேலும் வலுப்படுவேன்” என்றார்.
உலகின் பயங்கரமான பாடிபில்டர் என அழைக்கப்படும் இலியா கோலெம் (36) காலமானார். கடந்த 6ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. பெலாரஸைச் சேர்ந்த இவரை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். ரசிகர்கள் இவரை ‘The Mutant’ என செல்லமாக அழைக்கின்றனர். 154 கிலோ எடையும், 6.1 அடி உயரமும், 61 இன்ச் மார்பும், 25 இன்ச் பைசெப்ஸும் கொண்டிருந்தார்.
Sorry, no posts matched your criteria.