News September 14, 2024

முதலில் விசிகவினரை திருத்துங்கள்

image

விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “திருமாவளவன் முதலில் அவரது கட்சிக்காரர்களிடம் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இனி விசிகவினர் யாரும் குடிக்கக் கூடாது என தீர்மானம் கொண்டு வாங்க. குறைந்தபட்சம், மது ஒழிப்பு மாநாட்டுக்காவது யாரும் குடித்துவிட்டு வரக்கூடாது என உத்தரவு போடுங்க” எனக் கூறினார்.

News September 14, 2024

அர்ஜுனா சொல்வது இதற்குத் தானா…

image

மழைக் காலங்களில் இடி இடிக்கும் போது, அதனால் காதில் உள்ள செவிப்பறை பாதிப்படைய வாய்ப்புண்டு. எனவே அர்ஜுனா… அர்ஜுனா… என்று சொல்லும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலி இரண்டு பக்கமும் சென்று செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

News September 14, 2024

தெரிந்த பழமொழி.. தெரியாத அர்த்தம்..!

image

ஏதாவது பிரச்னை என்றால், “புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆற்று” என்ற பழமொழியை கிண்டலாக சொல்லிவிட்டு சிகரெட் புகைப்பவர்கள் ஏராளம். ஆனால் இது உண்மை அல்ல. புண்பட்ட நெஞ்சை “புக” விட்டு ஆற்று என்பதுதான் உண்மையான பழமொழி. வாழ்க்கையில் பிரச்னை என்றால், புதிய விஷயங்களில் மனதை புகவிட்டு சரியாக்கிக் கொள் என்பதே இதன் அர்த்தம். புக என்பது புகை என மாறியதால் அதன் அர்த்தமே மாறிவிட்டது என்பதுதான் வேதனை.

News September 14, 2024

உயிரைப் பணயம் வைக்கும் உணவு

image

ஜப்பானில் கிடைக்கும் ஃபுகு என்ற மீன் உணவு மிகவும் ஆபத்து வாய்ந்ததாகும். பாபர் பிஷ் எனும் மீனை கொண்டு இந்த உணவு சமைக்கப்படுகிறது. விஷயம் என்னவென்றால், இந்த மீனின் உடலில் 30 மனிதர்களை கொல்வதற்கான விஷம் உள்ளதாம். நிபுணத்துவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் மட்டுமே இந்த உணவு சமைக்கப்படுகிறது. சமைக்கும் போது சிறு பிழையை ஏற்படுத்தினால் கூட மரணம் உறுதி.

News September 14, 2024

க்ரீம் பன் வீடியோவை நீக்கிய அன்னபூர்ணா!

image

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லாத போது, அதில் உள்ள க்ரீமுக்கு மட்டும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் ஸ்ரீனிவாசன் முறையிட்டார். இதன் தொடர்ச்சியாக, அன்னபூர்ணாவின் எக்ஸ் தளத்தில் க்ரீம் பன் வீடியோ வைக்கப்பட்டது. இந்நிலையில், நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீனிவாசன் மன்னிப்பு கோரியதை அடுத்து, அந்த வீடியோவையும், நிர்மலா சீதாராமன் ஹேஷ் டேக்கையும் அன்னபூர்ணா நீக்கியது.

News September 14, 2024

சீனாவின் மாயவலையில் சிக்கும் மாலத்தீவு..!

image

ஏற்கனவே மாலத்தீவுக்கு கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடன் உள்ள நிலையில், அந்நாட்டுக்கு வரைமுறையின்றி கடன் வழங்க சீனா புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி உள்ள நாடுகளுக்கு கடனை அள்ளிக் கொடுத்து, பின்னர் அதை திருப்பி தர முடியாதபோது, அந்நாடுகளை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைப்பது தான் சீனாவின் ‘ஸ்டைல்’. பாகிஸ்தான், இலங்கையை தொடர்ந்து மாலத்தீவுக்கும் இந்த வலையை விரித்துள்ளது சீனா.

News September 14, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்.14 (ஆவணி 29) ▶சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7.45 -8.45 AM & 04.45 – 05.45PM ▶கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 09:30 – 10:30PM ▶இராகு காலம்: 09:00 – 10:30AM ▶எமகண்டம்: 01:30 – 03:00PM ▶ குளிகை: 06:00 – 07:30 AM ▶திதி: ஏகாதசி மாலை 5:05 வரை ▶ நட்சத்திரம் 05:57 PM வரை உத்திராடம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி, மி.சீருடம்

News September 14, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் போட்டோ அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 14, 2024

வரலாற்றில் இன்று

image

▶ 1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய இராணுவம் அவுரங்காபாத்தைக் கைப்பற்றியது. ▶ 1997 – ம.பியின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆற்றில் கவிழ்ந்ததில், 81 பேர் உயிரிழந்தனர். ▶ 2005- நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். ▶ 1959 –நிலவின் மேற்பரப்பை அடைந்த உலகின் முதல் விண்கலம் சோவியத்தின் லூனா 2. ▶ ஒவ்வொரு ஆண்டும் செப்.14 ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது.

News September 14, 2024

இங்கிலீஸ் விங்கிலீஸ்!

image

அலுவலகங்களில் மெசேஜ் அல்லது மீட்டிங்களில் பேசும் போது சில ஆங்கில வார்த்தைகளை சுருக்கி பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அவைகளில் சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
*IMO: In my opinion
*FYI: For your information
*BTW: By the way
*BRB: Be right back
*JK: Just kidding
*TTYL: Talk to you later

error: Content is protected !!