India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்ஸ்டாகிராமைப் போல வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி நீங்கள் ஸ்டேட்டஸில் வைக்கும் புகைப்படம், வீடியோவிற்கு உங்கள் நண்பர்கள் லைக் செய்ய முடியும். யாரெல்லாம் லைக் செய்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் பார்க்கவும் முடியும். இந்த அப்டேட்டை பெற, பயனர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியை புதுப்பிக்க வேண்டும். உங்களுடைய வாட்ஸ் அப்பில் இந்த அப்டேட் வந்துவிட்டதா?
நீங்கள் தொடங்கப்போகும் தொழிலின் முழு விவரத்தை பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தொழிலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான உத்தியை முன்னரே தெரிந்துகொள்ளவும். அனைவரிடமும் உரையாடாமல், அனுபவம் வாய்ந்தவர்களிடம் பணம் கையாளுதல் குறித்து ஆலோசனை கேட்பது நல்லது. பிறரிடமிருந்து உங்கள் தயாரிப்புகளைத் தனித்துவமாக காட்டுங்கள்.
சினிமாவிலிருந்து விஜய் ஓய்வுபெற மாட்டார் என நடிகரும், இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்துகொண்டே, சினிமாவிலும் விஜய் நடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அடுத்த ஒரு படத்தோடு ஓய்வுபெற மாட்டார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக தவெக என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தோனி முதலில் ஓய்வு பெறுவாரா.. நீங்களா? என பியூஷ் சாவ்லாவிடம் (35) கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே தோனி (43) என கூறிய அவர், சச்சினுடனும் விளையாடினேன், தற்போது அவரது மகனுடனும் விளையாடுகிறேன் என தெரிவித்தார். மேலும், தொகுப்பாளரை பார்த்து, உங்களுடனும் விளையாடுவேன், உங்கள் மகனுடனும் விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் என Thug Life சம்பவம் செய்தார்.
கார், பைக் பிரியரான நடிகர் அஜித் அடுத்தடுத்து கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகிறார். சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி ஷாலினி விலை உயர்ந்த Ducati பைக்கை பரிசளித்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ₹9 கோடி மதிப்பிலான Ferrari கார் ஒன்றை அஜித் வாங்கியிருந்தார். இந்நிலையில், தற்போது Porsche gt3 என்ற ₹4 கோடி மதிப்புள்ள புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
சீனாவில் 9 ஆம் நூற்றாண்டில் டாங் வம்ச ஆட்சியின் கீழ் முதன்முதலின் துப்பாக்கிப்பொடி கண்டறியப்பட்டது. சீன ரசவாதிகள் சாகாவர மருந்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எதிர்பாராமல் பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம், மற்றும் கரியை சேர்க்கையில் நெருப்புடன் வெடித்தது. இக்கலவையே துப்பாக்கி பொடியாக கண்டுபிடிக்கப்பட்டது. இது பல்வேறு காலத்தில் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.
அன்னபூர்ணா குழும தலைவர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக கோவை MP கணபதி குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பாகவே அவர் பேசியதாகவும், GSTல் உள்ள முரண்களை தெளிவாக எடுத்துரைத்ததாகவும் பாராட்டினார். யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவரது மன்னிப்பு <<14087957>>VIDEO<<>>க்கு பின்னணியில், பெரிய கூட்டமே உள்ளதாகவும் சாடினார்.
எலான் மஸ்கின் பதிவு ஆபாசமாக இருப்பதாக அவரது மகள் விவியனா ஜென்னா விமர்சித்துள்ளார். மஸ்க்கைப் போல் யாரும் பேசக்கூடாது என்றும் ஜென்னா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பதிவிட்டிருந்தார். அதற்கு டிரம்ப் ஆதரவாளரான மஸ்க், Swift-க்கு குழந்தை தருவதாகவும், அவர் வளர்த்து வரும் பூனைகளைக் கவனித்துக் கொள்வதாகவும் விமர்சித்து இருந்தார்.
மேற்கத்திய நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் 13ம் தேதி வருவது ஒரு துரதிர்ஷ்டமான நாளாக நம்பப்படுகிறது. ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாப்பிட்ட நாளும் இதில் ஒன்று என்ற நம்பிக்கையும் உள்ளது. கிர்கோரியன் காலண்டரில் 13ஆம் தேதியில் வெள்ளிக்கிழமை வருவது குறைவுதான். இது போன்ற நாட்களில் பல கெடுதல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இருப்பினும் ஒரு சில சமுதாயத்தில் 13 எண் கடவுளின் எண்ணாகவும் கருதப்படுகிறது.
<<14093865>>அந்தமான் <<>>பகுதியை கிழக்கிந்திய கம்பெனி 1788ஆம் ஆண்டு காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்தது. கடல் பரப்பை ஆய்வு செய்வதற்காக Archibald Blair என்ற அதிகாரியை நியமித்தது. 1789ல் பலருடன் அந்தமான் துறைமுகப்பகுதிக்கு வந்த Blair, அங்கு நீண்டகாலமாக தங்கினார். அவரது நினைவாக அந்தமானின் தலைநகரை ஆங்கிலேய கவர்னர் லார்ட் கார்ன்வாலிஸ், Port Blair என பெயர் சூட்டினார்.
Sorry, no posts matched your criteria.