News September 13, 2024

கோலியை பார்த்ததும் Fan Girl-ஆக மாறிய ராதிகா

image

விராட் கோலியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக அளவில் நம்மை பெருமைப்படுத்தியவருடன் ஒரே விமானத்தில் பயணித்தபோது எடுத்த புகைப்படம் என அவர் பதிவிட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணியினர் நேற்று சென்னை வந்தடைந்தனர். கான்பூரில் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

News September 13, 2024

பாசிசத்தின் உச்சம்.. பாஜக மீது அதிமுக பாய்ச்சல்

image

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்திற்கு பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, இது பாசிசத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளது. அக்கட்சியின் Ex மினிஸ்டர் ஜெயக்குமாரின் பதிவில், அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது, தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜக-வை ஏற்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

News September 13, 2024

நயன்தாரா, சிம்புவின் X தளம் ஹேக்கிங்

image

நடிகை நயன்தாரா தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு X மற்றும் இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. அவரது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற அல்லது விசித்திரமான பதிவுகளை புறக்கணிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிம்புவின் X கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 13, 2024

Admk மௌனம், விஜய் ஆலோசனை

image

மது ஒழிப்பு மாநாட்டிற்கு, ADMK மற்றும் விஜய் கட்சிக்கு பகிரங்கமாக VCK அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பு குறித்து ADMK தலைமை முடிவு எடுக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் ADMK தலைமையிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. அக்கட்சி தலைமை மௌனம் காக்கிறது. அதே நேரத்தில், மாநாட்டிற்கு வருவது குறித்து புஸ்ஸி ஆனந்துடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 13, 2024

வசூலால் மட்டும் சிறந்த படம் ஆகாது: H.வினோத்

image

சசிக்குமாரின் நந்தன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் H.வினோத் கலந்து கொண்டார். அப்போது நந்தன் படம் குறித்து பேசிய அவர், “பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷனை அள்ளும் படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை, எந்த படம் மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அதுதான் சிறந்த படம். அந்த வகையில் நந்தன் ஒரு சிறந்த படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

News September 13, 2024

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு SEBI தலைவர் மறுப்பு

image

அதிகாரத்தை பயன்படுத்தி விதிகளை மீறி வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு SEBI தலைவர் மாதபி பூரி, அவரது கணவர் தாவல் புச் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவதூறு பரப்பும் நோக்கில் முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். SEBI தலைவராக பொறுப்பேற்ற பின், இவர்களது அகோரா ஆலோசனை நிறுவனம் ₹2.95 கோடி வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

News September 13, 2024

நிதி அமைச்சரின் அதிகார ஆணவம்: கார்கே

image

அன்னபூர்ணா உணவக உரிமையாளரிடம் நடந்து கொண்ட விதம் நிதி அமைச்சர், பாஜகவின் அதிகார ஆணவத்தை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி தீவிரவாதமும், மோடியின் பணக்கார நண்பர்களுக்கு வரிச்சலுகையும் கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News September 13, 2024

தடை செய்யப்பட்ட பூண்டு விற்பனை

image

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு கிலோ ரூ.450- ரூ.600 வரை விற்கப்படுவதால், விலை குறைந்த சீன பூண்டுகளை வாங்கி விற்பனை செய்கிறார்கள். சீன பூண்டுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2024

டாஸ்மாக் வருமானம் தான் திமுகவுக்கு முக்கியம்: OPS

image

டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதில் தான் தமிழக அரசு அக்கறை செலுத்துவதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பூரண மதுவிலக்கு என வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக செயல்படுவதாக சாடிய அவர், மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மட்டுமே திமுக கவனம் செலுத்துகிறது என்றார். மேலும், மதுக்கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் குறைக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News September 13, 2024

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: BJP

image

கெஜ்ரிவால் CM பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. SC விதித்த நிபந்தனைகளின் படி அவர் முதல்வராக தனது கடமையை செய்ய முடியாத நிலையில், எதற்காக அந்த பதவியில் நீடிக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கலால் முறைகேடு வழக்கில் SC இன்று ஜாமின் வழங்கிய நிலையில், முதல்வர் அலுவலகத்திற்கு செல்லவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ அவருக்கு SC தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!