News September 13, 2024

மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தனர்: கோவை எம்.பி

image

அன்னபூர்ணா குழும தலைவர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக கோவை MP கணபதி குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பாகவே அவர் பேசியதாகவும், GSTல் உள்ள முரண்களை தெளிவாக எடுத்துரைத்ததாகவும் பாராட்டினார். யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவரது மன்னிப்பு <<14087957>>VIDEO<<>>க்கு பின்னணியில், பெரிய கூட்டமே உள்ளதாகவும் சாடினார்.

News September 13, 2024

ஆபாசமான பதிவு: எலான் மஸ்க்கை விமர்சித்த மகள்

image

எலான் மஸ்கின் பதிவு ஆபாசமாக இருப்பதாக அவரது மகள் விவியனா ஜென்னா விமர்சித்துள்ளார். மஸ்க்கைப் போல் யாரும் பேசக்கூடாது என்றும் ஜென்னா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பதிவிட்டிருந்தார். அதற்கு டிரம்ப் ஆதரவாளரான மஸ்க், Swift-க்கு குழந்தை தருவதாகவும், அவர் வளர்த்து வரும் பூனைகளைக் கவனித்துக் கொள்வதாகவும் விமர்சித்து இருந்தார்.

News September 13, 2024

செப்டம்பர் 13…. துரதிர்ஷ்டமா?

image

மேற்கத்திய நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் 13ம் தேதி வருவது ஒரு துரதிர்ஷ்டமான நாளாக நம்பப்படுகிறது. ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாப்பிட்ட நாளும் இதில் ஒன்று என்ற நம்பிக்கையும் உள்ளது. கிர்கோரியன் காலண்டரில் 13ஆம் தேதியில் வெள்ளிக்கிழமை வருவது குறைவுதான். இது போன்ற நாட்களில் பல கெடுதல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இருப்பினும் ஒரு சில சமுதாயத்தில் 13 எண் கடவுளின் எண்ணாகவும் கருதப்படுகிறது.

News September 13, 2024

‘Port Blair’-னா என்ன அர்த்தம்?

image

<<14093865>>அந்தமான் <<>>பகுதியை கிழக்கிந்திய கம்பெனி 1788ஆம் ஆண்டு காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்தது. கடல் பரப்பை ஆய்வு செய்வதற்காக Archibald Blair என்ற அதிகாரியை நியமித்தது. 1789ல் பலருடன் அந்தமான் துறைமுகப்பகுதிக்கு வந்த Blair, அங்கு நீண்டகாலமாக தங்கினார். அவரது நினைவாக அந்தமானின் தலைநகரை ஆங்கிலேய கவர்னர் லார்ட் கார்ன்வாலிஸ், Port Blair என பெயர் சூட்டினார்.

News September 13, 2024

அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

image

முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக பெரியசாமி உட்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், பெரியசாமியை தவிர்த்து மற்ற அனைவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் செப்.30ம் தேதி அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 13, 2024

₹250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்

image

‘தி கோட்’ படத்திற்கு நடிகர் விஜய்க்கு ₹200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ‘தளபதி 69’ படத்திற்கு விஜய் ₹275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ₹250 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2024

CM ஆபிஸுக்கு போகக் கூடாது: கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை

image

மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில், டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது. அதில், CM ஆபிஸுக்கு போகக் கூடாது, கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது, வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் பேசக்கூடாது என பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்துடன், ED வழக்கில் விதித்த அனைத்து நிபந்தனைகளும், இந்த CBI வழக்கிற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

News September 13, 2024

பணத்தை அள்ளி அள்ளி கொடுக்க ரெடி: நிதின் கட்கரி

image

புதிய சாலைக்காக நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். தமிழக நலனுக்காக அதிகளவில் பணம் அனுப்ப மத்திய அரசு ரெடி எனக் கூறியுள்ள அவர், USAவில் உள்ள தரத்திற்கு நிகராக சாலை கட்டுமானத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக ₹4,730 கோடி மதிப்பில் உருவாகி வரும், தஞ்சை-விக்கிரவாண்டி 4 வழிச்சாலையை ஆய்வு செய்தார்.

News September 13, 2024

போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம்

image

அந்தமான் – நிகோபர் UT தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீ விஜயபுரம் எனும் பெயர் சுதந்திர போராட்டத்தின் வெற்றியை குறிப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். அத்துடன், காலனித்துவ முத்திரையில் இருந்து தேசத்தை விடுவிக்கும் PM மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 13, 2024

91 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக

image

இந்தியாவில் நடைபெறவிருந்த AFG Vs NZ இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பந்து வீசப்படாமலேயே கைவிடப்பட்டது. உ.பி. நொய்டாவில் போட்டி நடக்கவிருந்த நிலையில், அங்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் 5 நாள் ஆட்டமும் பாதித்ததால், போட்டி கைவிடப்பட்டது. இந்தியாவில் கடந்த 91 ஆண்டுகளில் (1933 முதல்) நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், ஒரே ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.

error: Content is protected !!