News September 13, 2024

BREAKING: தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. குரூப் 2 தேர்வு நடத்த ஏதுவாக பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

News September 13, 2024

பொது அறிவு கேள்விகளுக்கு விடைகள்

image

இன்று காலை 10 மணிக்கு <<14089466>>பொது அறிவு<<>> பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே 1) போலந்து 2) டாக்டர். ராதாகிருஷ்ணன் 3) மெர்குரி 4) இத்தாலி 5) ஜப்பான் 6) ஜி.வி.மாவ்லங்கர். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 13, 2024

பெண்களின் புகாரளிக்கும் உரிமை

image

பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேராக செல்ல வேண்டியதில்லை. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன்படி, பெண்கள் காவல்நிலையத்திற்கு செல்லாமலேயே புகாரளிக்க முடியும். இமெயில் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து எழுத்து மூலமாகவோ காவல்நிலைய முகவரிக்கு புகார்களைத் தெரிவிக்கலாம்.

News September 13, 2024

7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று முதல் 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக RMC தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 15 முதல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் RMC கூறியுள்ளது. SHARE IT

News September 13, 2024

எலுமிச்சை சாற்றிலும் கவனம் தேவை!

image

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க லெமன் ஜூஸ் நல்லதுதான். இருப்பினும் அளவுக்கு அதிகமாக லெமன் ஜூஸ் குடிப்பது அழற்சி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 2-3 கிளாஸ் அளவு வரை மட்டுமே லெமன் ஜூஸ் அருந்த வேண்டும். சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கூடாது. செம்பு பாத்திரங்களில் லெமன் ஜூஸை வைத்து குடிக்க கூடாது. லெமன் ஜூஸ் குடித்த பின் வாய்கொப்பளிப்பது பற்களின் ஈறுகளைப் பாதுகாக்கும்.

News September 13, 2024

ஜெயராஜனின் இண்டிகோ சபதத்தை களைத்த யெச்சூரி

image

CPM மூத்த தலைவர் ஜெயராஜனின் 2 ஆண்டுகால இண்டிகோ விமான சபதத்தை சீதாராம் யெச்சூரி முடித்து வைத்துள்ளார். அதாவது, விமானத்தில் தகராறு செய்ததாக, ஜெயராஜனுக்கு 2 வாரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அந்நிறுவன விமானத்தில் இனி பயணிப்பதில்லை என அவர் சபதமிட்டார். இந்நிலையில், யெச்சூரியின் மறைவு செய்தி அறிந்து, வேறு வழியின்றி அந்நிறுவன விமானத்தில் அவர் டெல்லி சென்றார்.

News September 13, 2024

B.Ed படிப்புக்கு செப். 16 முதல் விண்ணப்பம்

image

பி.எட். படிப்புகளுக்கு செப். 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ITI அட்மிஷனுக்கான காலக்கெடு நீட்டிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே, இருமொழி கொள்கை அண்ணா காலத்தில் இருந்து செயல்படுத்தி வருவதாகவும், NEPஇல் உள்ள திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பே தாங்கள் அவற்றை நடைமுறைபடுத்தி விட்டதாகவும் கூறினார்.

News September 13, 2024

கோவை தொழிலதிபருக்கு அவமரியாதை: ராகுல்

image

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வார்கள் என்பது தற்போது கண்கூடாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், நேற்று அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2024

BREAKING: மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

image

நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் தனிப்பட்ட முறையில் உரையாடிய வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அன்னப்பூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது எடுத்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜகவினர் செயலுக்காக சீனிவாசனிடம் வருத்தம் கேட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

News September 13, 2024

திரும்பி வந்துட்டேனு சொல்லு..!

image

சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சென்னை அடுத்த மறைமலை நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆலையை ஃபோர்டு நிறுவனம் மூடியது. இந்நிலையில், ஏற்றுமதிக்கான கார்கள் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!