India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை நயன்தாரா தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு X மற்றும் இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. அவரது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற அல்லது விசித்திரமான பதிவுகளை புறக்கணிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிம்புவின் X கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு, ADMK மற்றும் விஜய் கட்சிக்கு பகிரங்கமாக VCK அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பு குறித்து ADMK தலைமை முடிவு எடுக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் ADMK தலைமையிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. அக்கட்சி தலைமை மௌனம் காக்கிறது. அதே நேரத்தில், மாநாட்டிற்கு வருவது குறித்து புஸ்ஸி ஆனந்துடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிக்குமாரின் நந்தன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் H.வினோத் கலந்து கொண்டார். அப்போது நந்தன் படம் குறித்து பேசிய அவர், “பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளும் படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை, எந்த படம் மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அதுதான் சிறந்த படம். அந்த வகையில் நந்தன் ஒரு சிறந்த படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அதிகாரத்தை பயன்படுத்தி விதிகளை மீறி வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு SEBI தலைவர் மாதபி பூரி, அவரது கணவர் தாவல் புச் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவதூறு பரப்பும் நோக்கில் முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். SEBI தலைவராக பொறுப்பேற்ற பின், இவர்களது அகோரா ஆலோசனை நிறுவனம் ₹2.95 கோடி வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.
அன்னபூர்ணா உணவக உரிமையாளரிடம் நடந்து கொண்ட விதம் நிதி அமைச்சர், பாஜகவின் அதிகார ஆணவத்தை காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி தீவிரவாதமும், மோடியின் பணக்கார நண்பர்களுக்கு வரிச்சலுகையும் கொடுப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு கிலோ ரூ.450- ரூ.600 வரை விற்கப்படுவதால், விலை குறைந்த சீன பூண்டுகளை வாங்கி விற்பனை செய்கிறார்கள். சீன பூண்டுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதில் தான் தமிழக அரசு அக்கறை செலுத்துவதாக ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பூரண மதுவிலக்கு என வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது அதற்கு முரணாக செயல்படுவதாக சாடிய அவர், மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மட்டுமே திமுக கவனம் செலுத்துகிறது என்றார். மேலும், மதுக்கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் குறைக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கெஜ்ரிவால் CM பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. SC விதித்த நிபந்தனைகளின் படி அவர் முதல்வராக தனது கடமையை செய்ய முடியாத நிலையில், எதற்காக அந்த பதவியில் நீடிக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கலால் முறைகேடு வழக்கில் SC இன்று ஜாமின் வழங்கிய நிலையில், முதல்வர் அலுவலகத்திற்கு செல்லவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ அவருக்கு SC தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். 17 நாட்களில் 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது ஒப்பீட்டளவில் மிக குறைவு என்றும், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை தமிழகத்தில் உருவாக்க அரசு முயற்சிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. குரூப் 2 தேர்வு நடத்த ஏதுவாக பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.