News September 13, 2024

அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

image

முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக பெரியசாமி உட்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், பெரியசாமியை தவிர்த்து மற்ற அனைவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் செப்.30ம் தேதி அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 13, 2024

₹250 கோடியை தாண்டிய விஜய் சம்பளம்

image

‘தி கோட்’ படத்திற்கு நடிகர் விஜய்க்கு ₹200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ‘தளபதி 69’ படத்திற்கு விஜய் ₹275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ₹250 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

News September 13, 2024

CM ஆபிஸுக்கு போகக் கூடாது: கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை

image

மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில், டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது. அதில், CM ஆபிஸுக்கு போகக் கூடாது, கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது, வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் பேசக்கூடாது என பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்துடன், ED வழக்கில் விதித்த அனைத்து நிபந்தனைகளும், இந்த CBI வழக்கிற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

News September 13, 2024

பணத்தை அள்ளி அள்ளி கொடுக்க ரெடி: நிதின் கட்கரி

image

புதிய சாலைக்காக நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். தமிழக நலனுக்காக அதிகளவில் பணம் அனுப்ப மத்திய அரசு ரெடி எனக் கூறியுள்ள அவர், USAவில் உள்ள தரத்திற்கு நிகராக சாலை கட்டுமானத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக ₹4,730 கோடி மதிப்பில் உருவாகி வரும், தஞ்சை-விக்கிரவாண்டி 4 வழிச்சாலையை ஆய்வு செய்தார்.

News September 13, 2024

போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம்

image

அந்தமான் – நிகோபர் UT தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீ விஜயபுரம் எனும் பெயர் சுதந்திர போராட்டத்தின் வெற்றியை குறிப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார். அத்துடன், காலனித்துவ முத்திரையில் இருந்து தேசத்தை விடுவிக்கும் PM மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 13, 2024

91 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக

image

இந்தியாவில் நடைபெறவிருந்த AFG Vs NZ இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பந்து வீசப்படாமலேயே கைவிடப்பட்டது. உ.பி. நொய்டாவில் போட்டி நடக்கவிருந்த நிலையில், அங்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் 5 நாள் ஆட்டமும் பாதித்ததால், போட்டி கைவிடப்பட்டது. இந்தியாவில் கடந்த 91 ஆண்டுகளில் (1933 முதல்) நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், ஒரே ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.

News September 13, 2024

கோலியை பார்த்ததும் Fan Girl-ஆக மாறிய ராதிகா

image

விராட் கோலியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக அளவில் நம்மை பெருமைப்படுத்தியவருடன் ஒரே விமானத்தில் பயணித்தபோது எடுத்த புகைப்படம் என அவர் பதிவிட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணியினர் நேற்று சென்னை வந்தடைந்தனர். கான்பூரில் கடைசி போட்டி நடைபெற உள்ளது.

News September 13, 2024

பாசிசத்தின் உச்சம்.. பாஜக மீது அதிமுக பாய்ச்சல்

image

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்திற்கு பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, இது பாசிசத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளது. அக்கட்சியின் Ex மினிஸ்டர் ஜெயக்குமாரின் பதிவில், அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது, தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜக-வை ஏற்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

News September 13, 2024

நயன்தாரா, சிம்புவின் X தளம் ஹேக்கிங்

image

நடிகை நயன்தாரா தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு X மற்றும் இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வ கணக்கு உள்ளது. அவரது X கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற அல்லது விசித்திரமான பதிவுகளை புறக்கணிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் சிம்புவின் X கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 13, 2024

Admk மௌனம், விஜய் ஆலோசனை

image

மது ஒழிப்பு மாநாட்டிற்கு, ADMK மற்றும் விஜய் கட்சிக்கு பகிரங்கமாக VCK அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பு குறித்து ADMK தலைமை முடிவு எடுக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் ADMK தலைமையிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. அக்கட்சி தலைமை மௌனம் காக்கிறது. அதே நேரத்தில், மாநாட்டிற்கு வருவது குறித்து புஸ்ஸி ஆனந்துடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!