News September 13, 2024

சற்று முன்: தாலிக்குத் தங்கம் திட்ட நிதி குறித்து HC கேள்வி

image

தாலிக்கு தங்கத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சென்னை HC கேள்வியெழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த HC, 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எத்தனை பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? என்பது உள்ளிட்டவை குறித்து கேள்வியெழுப்பியது. பின்னர் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு ஆணையிட்டது.

News September 13, 2024

காவல்துறை அமைச்சரிடமே ஆட்டையை போட்ட திருடன்

image

இங்கிலாந்தில் காவல்துறை அமைச்சரின் Bag திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வருடாந்திர போலீஸ் மாநாட்டில் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் பங்கேற்று, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார். அப்போது அவரது பை திருடப்பட்டது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் பிணையில் விடுவித்தனர்.

News September 13, 2024

AAP தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் மனைவி மெசெஜ்

image

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், அவரது மனைவி சுனிதா கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், “ஆம் ஆத்மி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள், உறுதியுடன் இருப்போம். விரைவில் மற்ற தலைவர்களும் விடுதலையாவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். கலால் முறைகேடு வழக்கில் கைதான அவருக்கு, SC இன்று ஜாமின் வழங்கியதையடுத்து விரைவில் விடுதலையாகிறார்.

News September 13, 2024

ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு

image

ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை- மதுரை டிக்கெட் கட்டணம் ₹1,900 – ₹4,000, சென்னை – நெல்லை கட்டணம் ₹2,000 – ₹4,000 வரை உயர்ந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT

News September 13, 2024

ITI அட்மிஷன் காலக்கெடு நீட்டிப்பு

image

தொழிற்பயிற்சி நிலையங்களில் ITI மாணவர் சேர்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி அறிக்கையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி மாணவ சேர்க்கையை நீட்டிப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. மாதம் ₹750 உதவித் தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 94990 55689 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

News September 13, 2024

நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்

image

நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு ஜோதிமணி MP கண்டனம் தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளார். அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார், மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 13, 2024

ஆந்திராவில் பதுங்கிய மனோ மகன்கள்?

image

பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். குடிபோதையில் சிறுவர் உள்பட இருவரை மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர் தாக்கியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, செல்போன் சிக்னலை கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News September 13, 2024

அதிகாரிகளுக்கு FSSAI உத்தரவு

image

இனிப்பு, காரம் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என FSSAI உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில, யூனியன் அரசின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரவிருக்கும் பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு சிறப்பு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, உணவகங்கள், உணவக கூடங்கள் மற்றும் பேக்கரிக்களில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

News September 13, 2024

உண்மைக்கு வெற்றி: AAP

image

<<14090205>>கெஜ்ரிவாலுக்கு<<>> SC ஜாமின் வழங்கியிருப்பதை உண்மைக்கு கிடைத்த வெற்றி என AAP கூறியுள்ளது. AAP மூத்தத் தலைவர் மணிஷ் சிசோடியா கூறுகையில், கெஜ்ரிவால் போல வேறு எந்த அரசியல்வாதியும் உண்மையானவர்கள் இல்லை, தேசப்பற்றாளர் இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருப்பதாக கூறினார். ஜாமின் அளித்ததற்காக SC, அரசியலமைப்பு, அம்பேத்கருக்கு சல்யூட் அடிப்பதாகவும் குறிப்பிட்டார்.

News September 13, 2024

174 நாள்களுக்கு பிறகு விடுதலையாகிறார் கெஜ்ரிவால்

image

SC ஜாமினையடுத்து 174 நாள்களுக்கு பிறகு <<14090205>>கெஜ்ரிவால்<<>> சிறையில் இருந்து விடுதலையாகிறார். மதுபானக் கொள்கை வழக்கில் மார்ச் 21இல் ED அவரை கைது செய்தது. இந்த வழக்கில் ஜூலை 12இல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இதே வழக்கில் அவர் சிபிஐயினரால் ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் இருந்தார். தற்போது SC இந்த வழக்கில் ஜாமின் வழங்கியுள்ளாதால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.

error: Content is protected !!