News October 17, 2024

டேட்டா காலியாகிறதா? உடனே இதை செய்யுங்க

image

சிலரின் மொபைலில் டேட்டா வேகமாக தீரும். இதற்கு ஏற்கெனவே டெலிட் செய்த செயலிகளும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆதலால், செட்டிங்ஸ் சென்று, மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் பகுதிக்குள் நுழைந்து, டேட்டா மற்றும் பிரைவசியை கிளிக் செய்ய வேண்டும். அப்போது டெலிட் செய்யப்பட்ட செயலிகள் வரும். இதையடுத்து கிளிக் ஆன் அசஸ், கனெக்ஷனை கிளிக் செய்து டெலிட் கொடுக்க வேண்டும். இதன்பிறகு, டேட்டா பகிர்வது நின்றுவிடும்.

News October 17, 2024

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி

image

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவான் பகுதியில் 4 பேரும், சரண் பகுதியில் 2 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. பிகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் சாராயம் விற்கவும், குடிக்கவும் தடை உள்ளது.

News October 17, 2024

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: சாம்சன் முன்னேற்றம்

image

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் சஞ்சு சாம்சன் 65ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அவர் அதிரடியாக 47 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இதன் எதிரொலியாக, ICC தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளார். நிதிஷ்குமார் ரெட்டி 72, ரிங்குசிங் 43, ஹர்திக் பாண்டியா 59ஆவது இடங்களுக்கு முன்னேறியுள்ளனர். ஜெய்ஸ்வால் ஓரிடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தில் உள்ளார்.

News October 17, 2024

அக்.17: வரலாற்றில் இன்று

image

1979: அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்கப்பட்டது
1948: நடிகை அன்ணபூர்னா பிறந்தார்
1965: பாப் பாடகி மால்குடி சுபா பிறந்தார்
1970: இந்திய அணி முன்னாள் வீரர் அணில் கும்பிளே பிறந்தார்
1981: கவி பேரரசர் கண்ணதாசன் மறைந்தார்
1992: நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தார்
1992: நடிகை பிரனீதா சுபாஷ் பிறந்தார்
– சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

News October 17, 2024

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

image

* எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது * மனிதன் தூங்கும் முன் கோபத்தை மறந்துவிட வேண்டும் * உண்மையே என் கடவுள். அஹிம்சையே அவரை உணரும் வழி * ஒழுக்கமான வீட்டிற்குச் சமமான பள்ளியும் இல்லை, நல்லொழுக்கமுள்ள பெற்றோருக்கு நிகரான ஆசிரியரும் இல்லை *ஒரு கோழை அன்பை வெளிப்படுத்த இயலாது. அது துணிச்சாலனவர்களின் உரிமை. SHARE IT.

News October 17, 2024

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: காங்கிரஸ் உறுதி

image

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினார். கூட்டணி கட்சித் தலைவரான உமர் முதல்வராவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

News October 17, 2024

ஒப்பிட முடியாத தமிழ் கவிஞன் கண்ணதாசன்

image

கவிப்பேரரசு கண்ணதாசனின் 39-வது நினைவுநாள் இன்று. சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்த அவரின் இயற்பெயர் முத்தையா ஆகும். தமிழ் இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் முத்திரை பதித்து, கலை ஆளுமையாகவே வாழ்ந்து மறைந்தார். 7,500க்கும் மேல் திரைப்படப் பாடல்கள், 5,000க்கும் மேல் கவிதைகள் உள்ளிட்டவை எழுதி ‘கவியரசு’ அழியாப்புகழ் பெற்றார். மரணமில்லா அக்கவிஞரை இன்று நினைவில் கொள்வோம்.

News October 17, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 17, 2024

நெய்யை தினமும் சாப்பிடுகிறீர்களா?

image

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது போல நெய்யை தினமும் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1) மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கு வழிவகுக்கும் 2) கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் 3) உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 4) செரிமான பிரச்னைகளுக்கு காரணமாக அமையும் 5) நெய்யில் உள்ள அபரிதமான கொழுப்பு, சிறுநீரக பிரச்னைக்கு வழிவகுக்கும். SHARE IT.

News October 17, 2024

கோலி சாதனையை முறியடிப்பாரா ரோஹித்?

image

கோலி தலைமையிலான முந்தைய இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. ரோஹித் தலைமையில் இந்திய அணி 12இல் வென்றுள்ளது. நியூசி.க்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் வென்றால், 15 போட்டிகளில் வென்ற இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை ரோஹித் புரிவார். இதேபோல் 248 ரன்கள் குவித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 காலத்தில் 1,000 ரன் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைப்பார்.

error: Content is protected !!