News October 17, 2024

₹1,00,000 சம்பளம்… தமிழக அரசில் வேலை!

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாகவுள்ள 26 ஒப்பந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் & மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree, B.E, B.Tech, B.Arch. வயது வரம்பு: 21-35. சம்பளம்: ₹20,000 – ₹1,00,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.20. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>TTDC<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 17, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ISSF World Cup: ஆடவர் 50 மீ. ரைபிள் 3 நிலை பிரிவில் இந்திய வீரர் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ➤செஸ் மாஸ்டர்ஸ் தொடர்: காலிறுதியின் ‘டை பிரேக்கர்’ சுற்றில் விஸ்வநாதன் ஆனந்தை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ➤IPL 2025: MI அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் நியமிக்கப்பட்டார். ➤’Hall of Fame’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை நீத்து டேவிட்டை சேர்த்து ICC கௌரவித்தது.

News October 17, 2024

புது மோசடி நடக்குது.. பெற்றோர்களே அலர்ட்!

image

பள்ளி மாணவர்களின் பெற்றோரை குறிவைத்து மோசடி நடப்பதால், விழிப்புணர்வோடு இருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. +2 மாணவர்களுக்கு தொழில் பயிற்சிக்கு பின் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும், பள்ளியில் ஆதார் புதுப்பிப்பு முகாம் நடப்பதாகவும் பெற்றோரிடம் வங்கிக்கணக்கு விவரம் பெற்று, அதில் உள்ள பணத்தை பறிப்பதாக குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற விவரங்களை போனில் கேட்காது என்றும் தெரிவித்துள்ளது.

News October 17, 2024

பல்லவ பேரரசின் முதல் குடவரை கோயில்!

image

பல்லவ பேரரசால் நிர்மாணிக்கப்பட்ட முதல் குடவரை சிவன் கோயில் என்ற பெருமைக்கு உரியது திருவண்ணாமலை சீயமங்கலம் பல்லவேஸ்வரம் திருக்கோயில். பறந்து விரிந்த ஏரி, சுற்றிலும் குன்றுகள் சூழ்ந்த இடத்தில் அமைந்த, 1400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் தான் ஆனந்த தாண்டவமாடும் முதல் ஆடவல்லான் சிலை செதுக்கப்பட்டுள்ளது. 11 பிரதோஷ நாட்களுக்கு இங்கு வில்வ இலை சாற்றி வழிபட்டால் கலைகள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம்.

News October 17, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இத்தாலியில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய அந்நாட்டின் பிரதமர் மெலோனி தடை விதித்தார். ➤உக்ரைனுக்கு $425 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க USA ஒப்புதல் அளித்தது. ➤இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கானா நகர மேயர் காஹில் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ➤கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பாக். நேரடி ஆதரவு அளிப்பதாக அந்நாட்டின் CSIS உளவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

News October 17, 2024

தலைவர் படத்தை தியேட்டரில் பார்த்த SK!

image

சென்னை PVR திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘வேட்டையன்’ படம் பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி, அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முன்னதாக, இப்படத்தை விஜய் திரையரங்கில் பார்த்த வீடியோ வைரலானது.

News October 17, 2024

சுகாதாரமற்ற நீரில் வாய் கொப்பளிக்காதீர்!

image

தண்ணீர், பூச்சிகளால் பரவும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க, சுகாதாரமற்ற நீரில் வாய் கொப்பளிப்பதை தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.*வீட்டு தண்ணீர் தொட்டியில் குளோரின் பயன்படுத்தவும் *குடிநீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தவும் *சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவவும் *நீரில் நனைந்த உணவு பொருள்களை உண்ணக்கூடாது எனவும் பரிந்துரைக்கின்றனர்.

News October 17, 2024

கரையை கடந்தது தாழ்வு மண்டலம்

image

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதி மேல் தற்போது நிலவி வருகிறது. இதனால், 2 நாள்களுக்கு பின் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

News October 17, 2024

தள்ளிப்போகிறது ‘லப்பர் பந்து’ OTT ரிலீஸ்

image

‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி தேதியை ஒத்திவைப்பதாக சிம்ப்ளி சவுத் அறிவித்துள்ளது. அதில், ”லப்பர் பந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அதன் ஸ்ட்ரீமிங் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். புதிய ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் சிம்ப்ளி சவுத்தில் வெளியாக இருந்தது. இதனால் இந்தியாவில் Hotstarலில் நாளை வெளியாகாது.

News October 17, 2024

ரயில்வேயில் 3,445 காலியிடங்கள்.. உடனே APPLY

image

ரயில்வேயில் 3,445 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே உள்ளன. டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், ட்ரெயின் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சம்பளம்: ரூ.19,900 – ரூ.21,700. வயது வரம்பு: 18 – 33. SHARE IT.

error: Content is protected !!