News September 13, 2024

கூல்டிரிங்ஸ் குடிக்கிறீங்களா.. இதை படிங்க முதல்ல!

image

வெறும் 475 மி.லி. கூல்டிரிங்ஸில் 51 கிராமுக்கு மேல் Added Sugar உள்ளது. இது மிக அதிக சர்க்கரை அளவாகும். மேலும், அதிகப்படியான நிறச் சாயங்களும், பாஸ்பேட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே கூல்டிரிங்ஸை தொடர்ந்து குடித்து வருபவருக்கு சர்க்கரை நோய் நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் உடல் பருமன், குடல் பிரச்சினை, பல் எனாமல் அரிப்பு, கிட்னி பாதிப்பு ஆகியவை கொசுறாக வந்து சேருமாம்.

News September 13, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 13, 2024

பிரபல டாக்டர் மீது பகீர் புகார்..!

image

தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் கூறினர். இந்நிலையில், பிரபல மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ், சில நடிகைகளை குறிப்பிட்டு அவர்களின் அந்தரங்கம் பற்றி தரக்குறைவாக யூடியூப் சேனல்களில் பேசினார். இதையடுத்து, அவர் மீது நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

News September 13, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அழுக்காறாமை ▶குறள் எண்: 161 ▶குறள்: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு. ▶பொருள்: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

News September 13, 2024

கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாதா?

image

கழுதைக்கு கற்பூர வாசனை மட்டுமல்ல, மற்ற எல்லா வாசனைகளையும் நுகர முடியும். பிறகு, எதற்கு கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிற பழமொழி? கழு என்ற ஒரு வகை புல் இருக்கிறது. இந்த புல்லை கொண்டு பாய் தைக்கும் போது, கற்பூர வாசனை நன்றாக வரும். இதை தான், “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். காலப்போக்கில் இது மருவி, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என ஆயிற்று.

News September 13, 2024

விளக்கு வைத்ததும் வீட்டை பெருக்கக்கூடாதா?

image

அந்தக் காலங்களில் வீடுகளில் வெளிச்சத்திற்காக எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துவர். இதன் வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும். எனவே மாலையில் வீட்டை பெருக்கும் போது, ஆங்காங்கே வைத்திருந்த தங்கம், வெள்ளி நகைகள் கூட குப்பையில் போய்விடும். எனவேதான், விளக்கு வைத்ததும் வீட்டை பெருக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இன்றும் சிலர் இதை ஐதீகமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

News September 13, 2024

அமைச்சர் முத்துசாமிக்கு எனது மனமார்ந்த நன்றி

image

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்த அறிவிப்பால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த கோரியே மதுவிலக்கு மாநாட்டை விசிக நடத்தவுள்ளது.

News September 13, 2024

வரலாற்றில் இன்று

image

1948 – ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு இந்திய துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் ஆணையிட்டார்.
2008 – டெல்லி தொடர் குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயமடைந்தனர்.
1929 – திராவிட இயக்க அரசியல் தலைவர் கோ.சி.மணி பிறந்த தினம்
1960 – நவரச நாயகன் கார்த்தி பிறந்த தினம் 2010- தமிழ் எழுத்தாளர் ஆர். சூடாமணி இறந்த தினம்

News September 13, 2024

அதானியின் $310 மில்லியன் நிதி முடக்கம்

image

சுவிஸ் வங்கிகளில் அதானி சேமித்திருந்த $310 மில்லியனுக்கும் அதிகமான நிதியை, சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. பணமோசடி மற்றும் முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக, 2021 ஆம் ஆண்டிலேயே அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் அதானி எப்படியெல்லாம் மோசடி செய்தார் என்பது தொடர்பான விரிவான அறிக்கையையும், ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.

News September 13, 2024

சென்னையில் மின்சாரம் துண்டிப்பு!

image

மணலி துணை மின் நிலையத்தில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மணலி, மின்ட் சாலை, வேளச்சேரி, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கொளத்தூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், மதுரவாயல், புரசைவாக்கம், மந்தைவெளி, தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!