India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IRS அதிகாரி ரவி கபூர், தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச வழிகாட்டுதல் பயிற்சியை வழங்கி வருகிறார். கடந்த 2021ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், தற்போது 3 லட்சம் மாணவர்கள் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். மன ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள், கல்வி சார்ந்து தேவையான உதவிகள், வழிகாட்டுதல்களை அவர் வழங்கிவருகிறார்.
ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 3 லட்சம் பேரில், 1.30 லட்சம் பேருக்கு கார்டுகள் தயாராக உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிய கார்டுகளை விநியோகிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம் முடிவதற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கியதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 5.79மீ நீளம் தாண்டிய பிரதிக்ஷா தங்கமும், 5.75மீ நீளம் தாண்டிய லக்ஷன்யா வெள்ளியும் வென்றனர். முன்னதாக, ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் 7.61மீ தாண்டி தங்கம் வென்ற நிலையில், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்துள்ளனர்.
வங்கதேசத்திற்கு எதிராக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் இன்னும் 58 ரன்கள் அடித்தால், சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்பார் கோலி. குறைந்த போட்டிகளில் (623) 27,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் தன்வசம் வைத்துள்ளார். இதுவரை 591 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 26,942 ரன்கள் குவித்துள்ள நிலையில், அந்த சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கோடி மோசடி மொபைல் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டு உள்ளதாக தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. SANCHAR SAATHI தளத்தில் மக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் மோசடி இணைப்புகளை தொலைத்தொடர்புத்துறை துண்டித்தும், முடக்கியும் வருகிறது. அதன்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டித்துள்ளது. மேலும், 2.27 லட்சம் மொபைல்களையும் முடக்கி உள்ளது. உங்கள் மொபைல் இணைப்பு வேலை செய்கிறதா? கமெண்ட்
மத்திய அரசின் PM-JAY திட்டத்தின்கீழ் ₹5 லட்சம் மதிப்பிலான இலவச <<14078906>>மருத்துவ காப்பீடு<<>> வழங்கப்படுகிறது. அதற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை அறிய https://www.pmjay.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, AM I Eligible ஆப்சனை க்ளிக் செய்யவும். பின் மொபைல் எண் மற்றும் CAPTCHAஐ உள்ளிட்டு, OTP சரிபார்ப்புக்குப் பிறகு உங்கள் தகவல்களை உள்ளிடவும். நீங்கள் தகுதியுடையவர் எனில், உங்கள் பெயர் ரிசல்டில் காட்டப்படும்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ADMKவில் இணைந்துள்ளார். ADMK முன்னாள் எம்.பியான இவர், OPS அணியில் இருந்தார். பின்னர் EPS அணிக்கு சென்ற அவர், 2022ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் பாஜகவில் இணைந்த அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், இன்று EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார்.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான 11 மாதத்தில் 192 பேரின் உடல்களில் இருந்து 1,086 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் ‘Flipkart Big Billion Days – 2024’ விற்பனை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இருப்பினும் மெம்பர்ஷிப் உள்ளவர்கள் 29ஆம் தேதி முதல் சில சலுகைகளை அனுபவிக்க முடியும். எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50-80% தள்ளுபடியும், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் பல அதிரடி சலுகைகளும் காத்திருக்கின்றன.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய தயார் என்றும், தனக்கு முதல்வர் பதவி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தன்னை மன்னிப்பார்கள் என நம்புவதாகவும் வேதனை தெரிவித்தார். மருத்துவர்கள் போராட்டம் முடியாததால், மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.