India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பணிக்கொடையை (Gratuity) தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கான இறப்பு, ஓய்வுகாலப் பணிக்கொடை ₹20 லட்சத்தில் இருந்து, ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கொடை உயர்வானது, கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி மறைவிற்கு ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியா என்ற கொள்கையின் பாதுகாவலனையும், நமது நாட்டை பற்றிய நீண்ட புரிதல் கொண்டவரையும் இழந்து விட்டதாகவும் ராகுல் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், அவருடனான ஆக்கப்பூர்வமான உரையாடல்களை தவறவிடுவதாகவும் மனம் வருந்தியுள்ளார். தேசிய அரசியலுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா வேதனை தெரிவித்துள்ளார்.
‘தி கோட்’ படத்தில் வரும் ‘மட்ட’ பாடலுக்கு நடனமாட, முதலில் நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஒரு குத்துப்பாடலுக்கு மட்டும் நடனமாட தான் விரும்பவில்லை என அவர் மறுப்பு தெரிவித்தது, தற்போது தெரியவந்துள்ளது. ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து இவர் நடனமாடிய ‘குர்ச்சி மடதபெட்டி’ பாடல் உலகம் முழுவதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மறைந்த CPM பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நன்கு தமிழ் பேச கூடியவர். சென்னையில் பிறந்தவர் என்பதாலும், ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வசித்ததாலும் தமிழ் நன்கு அவருக்கு சரளமாக வரும். பொதுக்கூட்டங்களில் தமிழிலும் பேசுவார். வட இந்திய அரசியல்வாதிகளில் நன்கு தமிழ் பேசுவோரில் இவரும் ஒருவர். இதனால் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுக்கு தமிழக கட்சிகளுடன் இவரே வருவது உண்டு.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி ஆகியோர் ஒரு இடம் முன்னேறி, முறையே 5, 6, 7வது இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு ஜனவரிக்குப் பின் எந்த டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. இருப்பினும் பிற வீரர்களின் சரிவால் தரவரிசையில் அம்மூவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜோ ரூட், வில்லியம்சன், மிட்செல், ஸ்மித் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
சென்னையில் 1952 ஆக.12இல் பிறந்த சீதாராம் யெச்சூரி, ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்ததால், 10ஆம் வகுப்பு வரை அங்கு படித்தார். தெலங்கானா தனி மாநில போராட்டத்தின் காரணமாக டெல்லி சென்ற அவர், அங்குள்ள பிரசிடன்ட் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்து, மேல்நிலை CBSE தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றார். பின் JNUவில் M.A பொருளாதாரம் படித்தார். பி.எச்.டி படிப்பில் சேர்ந்த அவர் எமர்ஜென்சியின்போது கைது செய்யப்பட்டார்.
சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவிடம் கடந்த 5 மணி நேரமாக நடைபெற்றுவந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அவரிடமிருந்து நன்கொடை விவரம், Hard Disk உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை கிளை குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
1974இல் SFIயில் இணைந்த அவர், அடுத்த ஆண்டே CPI(M)யில் இணைந்தார். JNUவில் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978இல் SFIயின் இணைச் செயலராக தேர்வானார். 1986இல் SFIயில் இருந்து விலகி CPI(M)யின் மத்திய குழு உறுப்பினர், பொலிட்பீரோ உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அதன்பின் மேற்கு வங்கத்தில் இருந்து 2005இல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது.
Sorry, no posts matched your criteria.