News September 12, 2024

சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

image

வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.5% வரை அதிகரித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 83,000 என்ற புதிய உச்சத்தை கடந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 25,415 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

News September 12, 2024

ஹாட் டிஸ்க்குகளை கைப்பற்றிய போலீஸ்

image

சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். அதன்படி, அவரை திருப்பூர் அழைத்துச் சென்று, அங்குள்ள அவருக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மகாவிஷ்ணுவிடம் இருந்த ஹாட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாளை அவர் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.

News September 12, 2024

ALERT: இடி, மின்னலுடன் மழை கொட்டும்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.

News September 12, 2024

பார்கின்சன் நோய் தாக்கத்துக்கு இதுவே காரணம்.. புதுத் தகவல்

image

பார்கின்சன் நோய் மூளையுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு, 9,350 பேரிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்துள்ளது. அதில், பார்கின்சன் நோய்க்கு குடல் பாதிப்பால் ஏற்படும் ஜீரணப் பிரச்னையே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீரண பிரச்னையால் உருவாகும் வாயுக்கள் உள்ளிட்டவை மூளைக்கு செல்வதாகவும், அதனால் பார்கின்சன் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

News September 12, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10.30 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) கிரிகர் கோகன் மெண்டல் 2) கந்தகம் 3) ஜே.சி. போஸ் 4) 20% – 25% 5) தீக்கோழி 6) ஈமோஃபீலியா (ரத்தம் உறைதல் குறைபாடு) 7) ஆலமரம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 12, 2024

2 மலிவு திட்டங்கள் அறிமுகம்… JIO அசத்தல்

image

₹189, ₹479 கட்டணங்களில் 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதில் ₹189 திட்டம் 28 நாள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம். அன்லிமிடெட் அழைப்பு மேற்கொள்ளலாம். ₹479 திட்டம் 84 நாள்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் அன்லிமிடெட் அழைப்பு, 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீண்டநாள் வேலிடிட்டி விரும்புவோருக்கு இது மிகவும் உகந்தத் திட்டமாகும். SHARE IT

News September 12, 2024

அதானியை எதிர்த்து போராட்டம்

image

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள், வேலைவாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

News September 12, 2024

வங்கதேச EX PM ஹாஸ்பிடலில் அனுமதி

image

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஹாஸ்பிடலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அவர் 5 ஆண்டு சிறையில் இருந்தநிலையில் கடந்த மாதம் 6ம் தேதிதான் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தனி கேபினில் உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

News September 12, 2024

சசிகுமாருடன் புதிய படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம்

image

நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குட் நைட், கருடன் போன்ற படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இது குடும்பக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட கூறப்படுகிறது. முன்னதாக இருவரும் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2024

வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: RMC

image

தமிழகத்தில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!