News September 12, 2024

சீதாராம் யெச்சூரியின் அரசியல் வாழ்க்கை

image

1974இல் SFIயில் இணைந்த அவர், அடுத்த ஆண்டே CPI(M)யில் இணைந்தார். JNUவில் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978இல் SFIயின் இணைச் செயலராக தேர்வானார். 1986இல் SFIயில் இருந்து விலகி CPI(M)யின் மத்திய குழு உறுப்பினர், பொலிட்பீரோ உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அதன்பின் மேற்கு வங்கத்தில் இருந்து 2005இல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

News September 12, 2024

சீதாராம் யெச்சூரி காலமானார்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது.

News September 12, 2024

கால்நடை வளர்ப்பிற்கு அரசு ₹1.20 லட்சம் வரை கடன்

image

கறவை மாடு வளர்ப்பிற்கு குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு கடனுதவி வழங்குகிறது. இதில் எருமை மாடு உள்ளிட்ட 2 கறவை மாடுகள் வாங்க ₹1.20 லட்சம், கறவை மாடு ஒன்றிற்கு ₹60,000 அளிக்கிறது. இதை திரும்பச் செலுத்த 3 ஆண்டு அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆண்டு வட்டியாக 7% விதிக்கப்படுகிறது. தகுதியாக ஆண்டு வருமானம் ₹3 லட்சம் வரையும், வயது வரம்பாக 18 முதல் 60 வயது வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News September 12, 2024

நாம் வெட்கப்பட வேண்டும்: ராகுல்

image

ம.பியில் ராணுவத்தினர் தாக்கப்பட்டு, அவர்களுடன் சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டது, மொத்த சமூகத்திற்கும் அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சட்டம் & ஒழுங்கு என்பதே கிடையாது எனவும், மகளிருக்கு எதிரான குற்றங்களில் BJP-யின் நிலைப்பாடு மிகவும் கவலை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு சமூகமும், அரசும் அவமானப்பட வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

News September 12, 2024

மோடிக்கு வில், அம்பை பரிசளித்த வீரர்

image

பாராலிம்பிக்ஸ் வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், பாரிசில் தான் பயன்படுத்திய வில், அம்பை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்தித்தபின் பேசிய அவர், “பாராலிம்பிக் வெற்றியாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிரதமர் நேரில் சந்தித்து பேசினார். அவர் வாழ்த்தியது எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.

News September 12, 2024

கொடூரம்: ராணுவ வீரர்களுக்கே இந்த நிலைமையா?

image

மத்திய பிரதேசத்தில் மேஜர் அந்தஸ்தில் உள்ள 2 ராணுவ அதிகாரிகளை அடித்து போட்டு, அவர்களுடன் சென்ற ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பது, தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த பணம், நகையும் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், மீதமுள்ள நால்வரை பிடிக்க 10 தனிப்படை அமைத்துள்ளனர்.

News September 12, 2024

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் EPS!

image

அதிமுக பொதுச்செயலாளர் EPSஇன் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களை மையப்படுத்தி இந்த பயணம் இருக்குமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் தோல்விகளால் சோர்ந்து போயுள்ள நிர்வாகிகளுக்கு இந்த சூறாவளி சுற்றுப்பயணம் உற்சாகமளிக்கிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

News September 12, 2024

கூல் லிப்-க்கு நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது?

image

‘கூல் லிப்’ போன்ற போதைப் பொருளை பாதுகாப்பற்றதாக அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவதாகவும், இளம் தலைமுறையின் சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது

image

வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.5% வரை அதிகரித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 83,000 என்ற புதிய உச்சத்தை கடந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 25,415 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

News September 12, 2024

ஹாட் டிஸ்க்குகளை கைப்பற்றிய போலீஸ்

image

சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். அதன்படி, அவரை திருப்பூர் அழைத்துச் சென்று, அங்குள்ள அவருக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மகாவிஷ்ணுவிடம் இருந்த ஹாட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாளை அவர் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.

error: Content is protected !!