India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையின் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. SHARE IT
சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் அளித்திருந்த மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாஸிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர், அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக கூறினார். பின்னர், போனில் உதயநிதி விசாரிக்கையில், அதிகாரி கூறியது பொய் என தெரியவந்தது. இதையடுத்து, சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இந்திய திரையுலகையே கலக்கிய படம் அந்நியன். அம்பி, ரெமோ, அந்நியன் என 3 கதாபாத்திரங்களில் விக்ரம் மிரட்டி இருப்பார். இந்நிலையில், இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் சங்கர். இதற்காக ரன்வீர் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விக்ரம், தன்னை வைத்து அந்நியன் 2 படத்தை ஷங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயிலில் தற்போது நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் பார்வதி யானை கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விசாரித்த போது, கடும் வயிற்றுப்போக்கால் யானை அவதிப்படுவதாகவும், அதற்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றி தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கி தரும் பெற்றோர்கள், ஒரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அதில் உள்ள பேட்டரி. பெரிய சைஸ் பேட்டரிகளை விட, பட்டன் பேட்டரிகளை குழந்தைகள் அதிகம் விழுங்குகின்றன. அப்படி விழுங்கும் போது, இந்த பேட்டரிகள் வெடித்து 3 வோல்ட் மின்சாரம் வெளியாகி குழந்தைகளின் உணவுக் குழாயையும், குடலையும் கடுமையாக சேதப்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று (செப். 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஒருகாலத்தில் குதிரை, மாட்டு வண்டிகளே போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்தன. இதனால் சேறு, சாக்கடை, கழிவுகள் என பலவற்றை அவை மிதிக்க நேரிடும். இதனால் அவற்றின் கால்களில் புண்கள் ஏற்பட்டு, நடக்க முடியாமல் போய்விடும். இதனை தவிர்ப்பதற்காக, கிருமி நாசினியான எலுமிச்சை பழத்தின் மீது அந்த விலங்குகளை மிதிக்க வைப்பார்கள். இதுவே காலப்போக்கில் புதிய வண்டியை எலுமிச்சை பழத்தின் மீது ஏற்றும் பழக்கமாக மாறியது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் >▶குறள் எண்: 51 ▶குறள்: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. ▶பொருள்: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
திமுகவை மிரட்டுவதற்காகவே விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக பாஜக தலைவர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து திருமாவளவனினிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கள்ளக்குறிச்சி சாராய மரணம்தான், மதுவிலக்கு மாநாட்டை நடத்த என்னை தூண்டியது. திமுகவை மிரட்டவும், சீட்டு பேரம் நடத்தவும் இந்த மாநாட்டை நான் நடத்துவதாக சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது” எனக் கூறினார்.
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தன்னை ஒரு புதிய அரசியல் சக்தி என நிரூபிப்பதற்காக திருமாவளவன் இந்த மாநாட்டை நடத்தலாம். இல்லையெனில், திமுகவுக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வதற்காக கூட இந்த மாநாட்டை அவர் நடத்தலாம்” எனக் கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, விசிக நடத்தவுள்ள இம்மாநாடு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.