India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கடற்படையில் SSR (Medical Asst.) வேலைக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி காலத்தில் மாதம் ₹14,600ம், பிறகு பதவி உயர்வுடன் படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு மாதம் ₹1.51 லட்சம் வரை வழங்கப்படும். ₹75 லட்சம் காப்பீடும் உண்டு. வேலைக்கு www.joinindiannavy.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 17ம் தேதி கடைசி நாள் ஆகும். SHARE IT
வங்கிகளில் உள்ள டெபாசிட் பணத்துக்கும் இனி வரி விதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மேல்முறையீடு வழக்குகளில் மும்பையில் உள்ள வருமான வரித் தீர்ப்பாயம், IT சட்டத்தின் 68, 69ஏ பிரிவுகளை சுட்டிக்காட்டி வரி விதிக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில், இனி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, போதிய விளக்கம் அளிக்கவில்லையேல் அத்தொகைக்கு வரி விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
*WC கால்பந்து தென் அமெரிக்க தகுதி சுற்றில் அர்ஜென்டினாவை கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. *வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ்-தனிஷா ஜோடி வென்றது. *தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் முதல் நாளில் இந்தியா 3 தங்கம் உள்ளிட்ட 9 பதக்கங்களை கைப்பற்றியது. *பாரிஸில் போதைப்பொருள் வாங்க முயற்சித்த ஹாக்கி வீரர் கிரெய்க், 12 மாதம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கக் கூடிய குரு பகவானை வணங்க கூடிய கிழமை வியாழக்கிழமை. சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளான அவருக்கு 16 வியாழக்கிழமை விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம் & வெண்முல்லை மலர் சாற்றி, வடகிழக்கு திசை நோக்கி தீபமேற்றி, கடலை அன்னம் படைத்து, குரு காயத்ரி மந்திரங்கள் சொல்லி வணங்கினால், குரு கிரகத் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
*அமெரிக்கா: எலான் மஸ்கின் ஸ்பேஸ் X விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்ணில் ஏவிய ‘டிராகன் விண்கலன்’ மூலம் 4 பேர், முதல் வணிக விண்வெளி பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். *வியட்நாம்: யாகி புயல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. *ஈராக்: பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் குண்டு வெடித்தது.
ஹிந்தியை எதிர்க்கவில்லை, அதை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்றே திமுக சொல்வதாக குறிப்பிட்டார். அதனை கட்டாயம் பாடமாக்கக் கூடாது என்ற அவர், இருமொழி கொள்கையில் சமரசம் கிடையாது, இருமொழி கொள்கையால்தான் தமிழகம் இன்று கல்வியில் வளர்ந்துள்ளது என்றும் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 80 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: 10-ம் வகுப்பு, குறைந்தபட்சம் ஓராண்டு கேட்டரிங் டிப்ளமோ படிப்பு. 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 18 முதல் 27 வரை. தேர்வாகிறவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.46,000 வழங்கப்படும். http://www.sci.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பு தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் இன்றும், ஜன.11ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 12ம் தேதி பயணிப்போர் வரும் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி பயணிப்போர் வரும் 15ஆம் தேதியும் IRCTC இணையதளம், ரயில் டிக்கெட் மையங்களில் முன்பதிவு செய்யலாம்.
சிலருக்கு அடிக்கடி கை, கால் மரத்துப் போய்விடும். அவர்களுக்கான சூப்பர் டிப்ஸ்: வால் மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை அரை ஸ்பூன் எடுத்து, அதனுடன் 2 சிறு துண்டு பட்டை சேர்த்து மிதமாக இடிக்க வேண்டும். அதை பாத்திரத்தில் போட்டு, ஒன்றரை கிளாஸ் நீர் ஊற்றி, ஒரு கிளாஸாக வரும் வரை சுட வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மரத்து போதல் பிரச்னை ஓடிவிடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையின் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. SHARE IT
Sorry, no posts matched your criteria.