India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று ஹாஸ்பிட்டலில் திடீரென அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையின் ICU பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். ஹாஸ்பிட்டல் முன்பு சிவசேனா (உத்தவ்) கட்சியினர் ஏராளமானோர் கூடியுள்ளனர்.
மழைக்காலத்தில் நமது உடல், ரத்தத்தின் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும். இந்த சமயத்தில், குளிர்ந்த நீரை தலையில் ஊற்றினால், சட்டென அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளை ரத்த நாளங்கள் கிழிந்து ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளதாம். எனவே, முதலில் பாதம், கால், இடுப்பு என தண்ணீர் ஊற்றி, பின்னரே தலையில் தண்ணீர் பட வேண்டுமாம். 40 வயதுக்கு மேற்பட்டோர் இதை பின்பற்றுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
உச்சந்தலையில் உயிர் சேதமடைந்த செல்களை நீக்கி , தலைமுடிக்கு வலுவூட்டி, புதுப்பிக்க கொத்துமல்லி ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம் என மருத்துவர் ஷமி கூறுகிறார். பசுமையான மல்லித்தழைகளை நல்ல நீரில் கழுவி எடுத்து, வெந்தயம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்து, முடியில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து சூடு நீரில் சீயக்காய் போட்டு அலசுங்கள். இந்த மருத்துவமுறை முடி உதிர்தலை 100% தடுக்கும் என்கிறார்.
24 மணி நேரத்திற்கு 204.5 mm-க்கு அதிகமான அளவில் பெய்யும் மழைக்கு (62-87 Km கடும் புயல் வீசும்) Red Alert விடுக்கப்படுகிறது. இதனை பெரு மழை அல்லது மிகக் கடுமையான கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மிக பலத்த இடி மின்னலுடன் பொழியும் இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (அக்.16) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று 11 மணிக்கு <<14352096>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் 2) ராடன் வாயு 3) ஏழு 4) Dihydrotestosterone 5) பரங்கி மலை – சென்னை 6) பச்சோந்தி 7) தும்பி இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ உள்ள 4,000 ஆவின் பால் பவுடர் பாக்கெட்டுகளும், 90 நாள்கள் கெடாத 50,000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சித்ராவின் கணவரை விடுதலை செய்ய திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 5க்கு ஒத்திவைத்தனர். 2020 டிசம்பரில் ஹோட்டலில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.
UPI செயலிகளில், PhonePe பரிவர்த்தனைகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. செப். நிலவரப்படி, மின்னணு பரிவர்த்தனைகளில் ₹10.30 லட்சம் கோடி மதிப்பிலான 722 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் விளைவாக, அதன் சந்தைப் பங்களிப்பு 49%ஆக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பைப் பொறுத்தவரை, PhonePe 48%, GPay 37%, Paytm 7% ஆக உயர்ந்துள்ளன. Navi & CRED செயலி முறையே 14, 12 கோடி பரிவர்த்தனைகளைக் கடந்துள்ளன.
Sorry, no posts matched your criteria.