News September 10, 2024

ஜீ5 OTTயில் ‘டிமான்ட்டி காலனி 2’ படம்

image

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான ‘டிமான்ட்டி காலனி 2’ படம் செப்.27ஆம் தேதி OTTயில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரர் கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ஆக.15இல் தியேட்டர்களில் ரிலீஸாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, ஜீ5 OTT தளத்தில் செப்.27 முதல் இந்தப் படத்தை காணலாம் என படக்குழு அறிவித்துள்ளது. யாரெல்லாம் இந்தப் படம் பார்த்தீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 10, 2024

தொடரும் மருத்துவர்கள் போராட்டம்

image

மேற்கு வங்கத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறியும், மாநில சுகாதாரச் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி விலகக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 10, 2024

உடனே மாற்றம் : உதயநிதி போட்ட உத்தரவு

image

மதுரையில் இன்று மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசு திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தொய்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதியிடம் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். இதனையடுத்து, வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

News September 10, 2024

சில்லறை வணிகத்தை பாதுகாக்க போராடியவர்!

image

நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயிகளுக்கு அடுத்து முதுகெலும்பமாக இருப்பவர்கள் சிறு வணிகர்கள். அவர்களின் வாழ்வுரிமையையும், மண்ணின் தற்சார்பு சில்லறை வணிகத்தையும் அந்நிய நாடுகளுக்கு திறந்துவிட வழிவகை செய்தது வணிகத்தில் FDI. அதனை எதிர்த்து தென்னிந்தியா முழுவதுமுள்ள சிறு வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து, களம் கண்டவர். அவரது தொடர் அழுத்தமே பின்னாளில் அரசை பின்வாங்க வைத்தது.

News September 10, 2024

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவரா?

image

பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் மன தைரியம் உள்ளவராகவும், சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவராகவும் இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இயல்பிலேயே ஆளுமைத்திறன், தன்னம்பிக்கை, மன உறுதி இருப்பதால் அதிகாரப் பதவி தேடி வரும். தலைமைப் பண்பு, பிறரது தேவையறிந்து உதவி செய்யும் குணம், உங்களிடம் இருக்கும் என்கிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.

News September 10, 2024

டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை குறைப்பு

image

வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் எலக்ட்ரிக் கார்களின் விலையை டாடா நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் விலை ₹3 லட்சமும், பன்ச் மாடல் கார் விலை ₹1.2 லட்சமும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டியாகோ மாடல் எலக்ட்ரிக் கார் விலையை ₹40,000 வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு சலுகை அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2024

வெள்ளையன் மறைவுக்கு செல்வபெருந்தகை இரங்கல்

image

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவிற்கு செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். காமராஜர் மீது அளவற்ற பற்றுக் கொண்டு காங்கிரசில் பணியாற்றி, பின் வணிகர் சங்கத்தை தொடங்கியவர். தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் வணிகப் பெருமக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

News September 10, 2024

’கடைசி உலகப் போர்’ டிரெய்லர் நாளை வெளியீடு

image

ஹிப் ஹாப் ஆதி நடித்து, இயக்கியுள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் செ.20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நாசர், நட்டி, தலைவாசல் விஜய் உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங் கமண்டல சொல்லுங்க.

News September 10, 2024

விரைவில் மேலும் 10 புதிய வந்தே பாரத் ரயில்

image

நாட்டில் விரைவில் 10 வந்தே பாரத் ரயில்கள் விடப்பட உள்ளன. நாடு முழுவதும் அதிவேக ரயில்களான வந்தே பாரத்தை விடும் பணிகள் துரித கதியில் நடக்கின்றன. அந்த வரிசையில் வருகிற 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ரெயில்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

News September 10, 2024

பூமிக்கு மிக அருகில் ஒரு ‘விண்கல்’

image

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக, ISRO எச்சரித்துள்ளது. ‘அபோபிஸ்’ என்ற இந்த விண்கல், 2029 ஏப்ரல் 13இல் பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் அளவுக்கு பெரிதாகவும், INS விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றமும் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 KM தொலைவில் உள்ளது. இதுபோன்ற பெரிய விண்கல், இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!