India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ உள்ள 4,000 ஆவின் பால் பவுடர் பாக்கெட்டுகளும், 90 நாள்கள் கெடாத 50,000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சித்ராவின் கணவரை விடுதலை செய்ய திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 5க்கு ஒத்திவைத்தனர். 2020 டிசம்பரில் ஹோட்டலில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.
UPI செயலிகளில், PhonePe பரிவர்த்தனைகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. செப். நிலவரப்படி, மின்னணு பரிவர்த்தனைகளில் ₹10.30 லட்சம் கோடி மதிப்பிலான 722 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் விளைவாக, அதன் சந்தைப் பங்களிப்பு 49%ஆக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பைப் பொறுத்தவரை, PhonePe 48%, GPay 37%, Paytm 7% ஆக உயர்ந்துள்ளன. Navi & CRED செயலி முறையே 14, 12 கோடி பரிவர்த்தனைகளைக் கடந்துள்ளன.
Cleaning என்பதற்கும் Cleansing என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? இரு சொற்களுக்கும் தூய்மைப்படுத்துதல் (அ) அழுக்கை அகற்றுவது (அ) துடைத்தெறிவது என்பதுதான் பொருள். ஆனால், Cleaning என்பது செயலைக் குறிக்கப் பயன்படுகிறது (Cleaning the floor). சுத்தப்படுத்துதல் என்ற பொருளோடு நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாத இடத்தில் Cleanse என்பது (Ethinic Cleansing – இன அழிப்பு) உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்.15- 18 வரை IT நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் பைஜு சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் அருகே நேற்று இரவு காரில் வேகமாக சென்ற அவர், பைக் மீது மோதியுள்ளார். இதில், பைக்கில் வந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து, 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் PHD பட்டம் பெறும்போதே மாணவர் ஒருவர் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில், PHD மாணவர்களிடம் guideகள் லட்ச ரூபாய் வரை பணம் கேட்பதாகவும், ஹோட்டல்களில் விருந்து வைக்க நிர்பந்திப்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்யச் சொல்வதாகவும் புகார் கூறியுள்ளார். ஆதிதிராவிடர் விடுதிகள் முறையாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையால் இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். செந்தில் பாலாஜி ஆக இருந்தாலும் சரி, விஜயபாஸ்கர் ஆக இருந்தாலும் சரி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், மணல் மாஃபியாக்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
கூகை திரைப்பட இயக்கம் நடத்திய நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ‘லியோ-2’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எடுப்பேன். அந்த திரைப்படத்திற்கு ‘லியோ 2’ என்று பெயரிடாமல் ‘பார்த்திபன்’ என்று பெயரிட வாய்ப்புள்ளது என்றார். ‘லியோ’ படத்தில் விஜய், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழகத்தில் 1,000 இடங்களில் நாளை மழைக்கால சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால் அனைத்துத் துறை அலுவலர்களும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்திய அவர், எந்த கிராமத்தில் காய்ச்சல் என்றாலும் உடனே அங்கு முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். சளி, சேற்றுப்புண் போன்ற மழைக்கால உபாதைகளுக்கு இம்முகாமில் பயன் பெறலாம்.
Sorry, no posts matched your criteria.