India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேரன் அசிமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூவருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவை பொருளாதார வளமையில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை பற்றிய ஆராய்ச்சிக்காக இவர்கள் தேர்வாகியுள்ளனர். பொருளாதார நோபல் பரிசு ‘Sveriges Riksbank Prize in Economic Sciences’ என்று அழைக்கப்படுகிறது.
கனமழையையொட்டி, பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் மின் இணைப்புகளை கண்காணிக்கவும், வடிகால்களை சுத்தம் செய்து திறந்தவெளி கால்வாய்களை மூடவும், பள்ளிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்றவும், பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், பழுதான, பலவீனமான கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
➤ நீங்கள் வண்டியின் உரிமையாளர் அல்ல.
➤ வண்டியை ஓட்டுபவரே அதன் உரிமையாளர். ➤ கண்ணியமாக பேசி, மரியாதையைப் பெற்றுக்கொள்ளுங்கள். ➤ கதவை மெதுவாக மூடவும்.
➤ உங்கள் அணுகுமுறையை நீங்களே வைத்து கொள்ளுங்கள். தயவுசெய்து எங்களிடம் காட்ட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு அதிக பணம் கொடுக்கவில்லை. ➤ bhaiya என்று அழைக்க கூடாது. இந்த Rules பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க
மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று ஹாஸ்பிட்டலில் திடீரென அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையின் ICU பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். ஹாஸ்பிட்டல் முன்பு சிவசேனா (உத்தவ்) கட்சியினர் ஏராளமானோர் கூடியுள்ளனர்.
மழைக்காலத்தில் நமது உடல், ரத்தத்தின் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும். இந்த சமயத்தில், குளிர்ந்த நீரை தலையில் ஊற்றினால், சட்டென அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளை ரத்த நாளங்கள் கிழிந்து ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளதாம். எனவே, முதலில் பாதம், கால், இடுப்பு என தண்ணீர் ஊற்றி, பின்னரே தலையில் தண்ணீர் பட வேண்டுமாம். 40 வயதுக்கு மேற்பட்டோர் இதை பின்பற்றுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
உச்சந்தலையில் உயிர் சேதமடைந்த செல்களை நீக்கி , தலைமுடிக்கு வலுவூட்டி, புதுப்பிக்க கொத்துமல்லி ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம் என மருத்துவர் ஷமி கூறுகிறார். பசுமையான மல்லித்தழைகளை நல்ல நீரில் கழுவி எடுத்து, வெந்தயம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்து, முடியில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து சூடு நீரில் சீயக்காய் போட்டு அலசுங்கள். இந்த மருத்துவமுறை முடி உதிர்தலை 100% தடுக்கும் என்கிறார்.
24 மணி நேரத்திற்கு 204.5 mm-க்கு அதிகமான அளவில் பெய்யும் மழைக்கு (62-87 Km கடும் புயல் வீசும்) Red Alert விடுக்கப்படுகிறது. இதனை பெரு மழை அல்லது மிகக் கடுமையான கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மிக பலத்த இடி மின்னலுடன் பொழியும் இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (அக்.16) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று 11 மணிக்கு <<14352096>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் 2) ராடன் வாயு 3) ஏழு 4) Dihydrotestosterone 5) பரங்கி மலை – சென்னை 6) பச்சோந்தி 7) தும்பி இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.