India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குபேர தரிசனம் செல்வ வளங்களை அள்ளித்தந்து,
முன்னேற்றத்தை தரும் என்கின்றன ஞானநூல்கள். எனில், ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரிய ஆச்சரியம். அப்படியான அற்புத ஆலயம் திருச்சிக்கு அருகில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ராசிக்கு ஒருவர் என 12 குபேரர்கள் அருள் பாலிக்கிறார்கள் இங்கு, காமாட்சி அம்பாளுடன் ஏகாம்பரேஸ்வரர் அழகுறக் கோயில் கொண்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்னூர் பகுதியில் அதிகாலை 2.35 மணியளவில் பிஎஸ்எப் நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து பதிலுக்கு இந்திய படையினரும் திரும்பி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாக். படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்திக் காெண்டனர்.
சென்னை HCக்கு 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க SC கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஏப்ரல் மாதம் சென்னை HC கொலீஜியம் பரிந்துரைத்தது. அதற்கு ஆளுநரும், முதல்வரும் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது SC கொலீஜியமும் பரிந்துரைத்துள்ளது.
ஜென் Z தலைமுறை பிறரிடம் வேலை செய்வதை விட, சொந்தமாக தொழில் தொடங்கவே விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. Santander UK என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 77% பேர் சொந்த தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளனர். அதிலும், 39% பேர் ஸ்மார்ட்போன்கள் மூலம் வணிகம் செய்ய விரும்புகின்றனர். இது ஜென் X மற்றும் பூமர் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அபரிமிதமான மாற்றமாகும்.
அறநிலையத்துறை கல்லூரிகளில் ஆன்மிக பாடப்பிரிவுகளை ஏற்க முடியாது என தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை பணி குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், அறநிலையத்துறை கல்லூரிகளில் கந்தசஷ்டி பாட வைப்பதை நியாயப்படுத்த முடியாது. தனது விமர்சனம் குறித்து அறநிலையத்துறையே முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
PM மோடியை விமர்சித்த 2 மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 3 மாலத்தீவு அமைச்சர்கள், மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தனர். இதையடுத்து, அவர்கள் மூவரையும் மாலத்தீவு அதிபர் முகம்மது மொய்சூ இடைநீக்கம் செய்திருந்தார். இதில் 2 பேர் பதவி விலகியுள்ளனர். மாலத்தீவு அதிபர் மொய்சூ விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில் 2 பேரும் பதவி விலகியிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், பொங்கலுக்கு படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபரில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எதிர்பார்த்த நாள்களுக்குள் முடியாததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.
இன்றைக்கு (செப்.11) சர்வதேச மவுன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை தமிழர்கள் மவுன விரதம் என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடித்து வருகிறார்கள். சரி. ஒரே ஒரு நாள் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? மன அழுத்தம் குறையும். கோபத்தில் இருந்து விடுபட முடியும். ரத்த அழுத்தம் குறைகிறது. மனம் தூய்மையாகிறது. எதிர்மறை சிந்தனைகள் சுத்தமாக இருக்காது.
அண்ணாமலை அரசியல் நாகரிகம் இல்லாதவர் என அதிமுக EX மினிஸ்டர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். இபிஎஸ்.சை தற்குறி என்று அண்ணாமலை விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், எச்.ராஜா உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம், பண்பாடு கொண்டவர்கள் என்று பதிலளித்தார். அண்ணாமலை IPS அதிகாரியாக இருந்து இருக்கலாம், ஆனால் தாங்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 405 இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதில், 279 தொழிற்பழகுநர் இடங்கள். எஞ்சிய 126 இடங்கள் எலக்ட்ஷிசியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்டவை ஆகும். இந்த வேலைக்கான விண்ணப்பப்பதிவு, இந்திய அணுசக்தி நிறுவன இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள்.
Sorry, no posts matched your criteria.