News October 14, 2024

HIL: வீரர்களை போட்டி போட்டு எடுத்த அணிகள்

image

இந்திய அணி அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் மெடல்கள் வென்றதும், டீம் இந்தியாவின் ஆக்ரோஷ ஸ்டைலும், ஹாக்கி மீது மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 2017-ல் நிறுத்தப்பட்ட ஹாக்கி லீக் இந்தியா (HIL) தொடர், இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது. அதற்காக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கை ரூ.78 லட்சத்துக்கு சூர்மா ஹாக்கி கிளப் எடுத்துள்ளது. அனல் பறக்கும் ஹாக்கி பார்க்க நீங்கள் தயாரா?

News October 14, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) முந்நீர் என்றால் என்ன? 2) இரும்பைவிட 4 மடங்கு கனமான வாயு எது? 3) பண்டைய கிரேக்கர்களின் புனித எண் எது? 4) DHT என்பதன் விரிவாக்கம் என்ன? 5) இமயமலையைவிட வயதில் மூத்த மலை எது? 6) உடலின் நீளத்தைப் போல் இருமடங்கு பெரிய நாக்கை கொண்ட ஊர்வன உயிரினம் எது? 7) கொசுக்களின் பரம எதிரி என அழைக்கப்படும் பறக்கும் பூச்சியினம் எது?விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 14, 2024

+2 பொதுத்தேர்வு அட்டவணை

image

நடப்பு கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
03.03.25 – தமிழ், மொழிப்பாடம்,
06.03.25 – ஆங்கிலம்,
11.03.25 – கணிதம், வணிகவியல், விலங்கியல்
14.03.25 – கணினி அறிவியல், நர்சிங்,
18.03.25 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்,
21.03.25 – வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 25.03.25 – இயற்பியல், பொருளியல். SHARE IT.

News October 14, 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

image

நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
*28.03.2025 – தமிழ், மொழிப்பாடம்
*02.04.2025 – ஆங்கிலம்
*07.04.2025 – கணிதம்
*11.04.2025 – அறிவியல்
*15.04.2025 – சமூக அறிவியல்
SHARE IT

News October 14, 2024

10, 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

image

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியுடன், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடக்கும் +2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியாக உள்ளது. மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும் +1 தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது. மார்ச் 28ல் தொடங்கி ஏப். 15ல் முடிவடையும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19ல் வெளியாக உள்ளது.

News October 14, 2024

10, 11, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

image

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப். 7 முதல் பிப். 14 வரை நடக்கிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி, மார்ச் 25ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப். 15ல் முடிவடைகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறுகிறது.

News October 14, 2024

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: மத்திய அரசிடம் ஜியோ கோரிக்கை

image

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சமற்ற நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று JIO நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு அந்நிறுவனம் எழுதிய கடிதத்தில், சேட்டிலைட் மூலம் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும், நிலத்தில் டவர்கள் அமைத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு சமமான வணிக சந்தையை ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

News October 14, 2024

உ.பி. இடைத்தேர்தல்: உடைகிறதா INDIA கூட்டணி?

image

உ.பி.யில் 10 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 6 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு MPஆனதால், சமாஜ்வாதி MLAக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்த 10 தொகுதிகளில் 5-ஐ தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியிருந்தது. இருப்பினும் INDIA கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு இதுவரை எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை.

News October 14, 2024

அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது உத்தரவு

image

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்த நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நீர் தேங்குதல், மரம் முறிந்து சாலைகள் முடங்குதல், போக்குவரத்து தடை, மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

News October 14, 2024

ஜலதோஷத்தை விரட்டி அடிக்கும் வெற்றிலை தேநீர்

image

மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் வெற்றிலை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரு வெற்றிலை இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான வெற்றிலை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

error: Content is protected !!