News August 25, 2025

அதிமுக கூட்டணியை மாற்றுவது நல்லது: திருமா

image

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து புரண்டிய அக்கட்சியினர், தற்போது அதே கருத்தை விஜய் கூறும்போது அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதுதான். இல்லையென்றால் அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றார்.

News August 25, 2025

IPL 2026-லும் தோனி வேண்டும்: வன்ஷ் பேடி

image

2026 IPL சீசனிலும் தோனி விளையாட வேண்டும் என்று தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னையும் விரும்புவதாக CSK வீரர் வன்ஷ் பேடி கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில், அணிக்கு தோனி அளிக்கும் பங்களிப்பு & அவரது வழிநடத்தும் திறனை யாராலும் ஈடு செய்ய முடியாது என புகழ்ந்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட CSK மீண்டு வர வேண்டும், தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

News August 25, 2025

பொது அறிவு வினா- விடை!

image

1. இந்தியாவில் அதிக காடுகளை கொண்ட மாநிலம் எது?
2. மனித உடலின் மிக நீளமான எலும்பு எது?
3. தமிழகத்தில் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
4. மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம்?
5. ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
சரியான பதிலை கமெண்ட் செய்யவும். பதில்கள் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 25, 2025

கால் நகத்தை விற்று காசு பார்க்கும் பெண்..வினோதம்!

image

வரட்டி, விரலுக்கு க்ளவுஸ் என வித்தியாசமான பொருள்களை ஆன்லைனில் விற்பவர்களை நாம் பார்த்திருப்போம். அதேபோல, தனது கால் நகங்களை விற்று 1 வாரத்திற்கு ₹5 லட்சம் வரை சம்பாதிக்கிறார் லண்டனை சேர்ந்த லதீஷா ஜோன்ஸ் எனும் 24 வயதான பெண். இவரிடம் இருந்து நகத்தை வாங்கும் ஒரு கஸ்டமர், அதனை பவுடராக அரைத்து, உணவில் உப்புக்கு பதில் அதை சேர்த்து சாப்பிடுகிறாராம். இதைப்பற்றி உங்க கருத்த சொல்லிட்டு போங்க..

News August 25, 2025

தன்கர் விவகாரத்தில் ஆராய்ச்சி செய்யாதீர்: அமித்ஷா காட்டம்

image

ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தன்கர் துணை ஜனாதிபதியாக இருந்தபோது அரசியலமைப்பின்படி சிறப்பாக பணியாற்றினார்; மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் ராஜினாமா செய்தார் என அமித்ஷா விளக்கமளித்துள்ளார். அவர் குறித்து தேவையற்ற ஆராய்ச்சிகளை செய்து, ஏதோ ஒன்றை கண்டுபிக்க வேண்டும் என நினைப்பது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வும்.. விமர்சனங்களும்!

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு ரசிகர்களிடம் தொடர் விமர்சனங்களை பெற்று வருகிறது. 2025 IPL-ல் அதிக விக்கெட்களை எடுத்த பிரசித் கிருஷ்ணா(25 விக்கெட்கள்), அதிக ரன்களை குவித்த சாய் சுதர்ஷன்(759 ரன்கள்) ஆகியோருக்கு இடமில்லை. அதே நேரத்தில், அதிக சம்பளம் வாங்கிய ஷ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வால், KL ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் திறமையை நிரூபித்தும், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. நீங்க என்ன சொல்றீங்க?

News August 25, 2025

திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் காங்கிரஸ்?

image

அறிவாலயத்தில் நடக்கும் 2026 தேர்தலுக்கான சீட் ஷேரிங் டாக்ஸ் அண்ணாசாலை முழுவதும் கேட்கிறதாம். 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் நின்ற காங்., 18-ல் வென்றது. இந்நிலையில், விஜய் என்ட்ரீ, கட்சியின் வளர்ச்சி ஆகியவற்றை காட்டி 2026-க்கு 30-35 தொகுதிகள் வரை காங்., கேட்பதாக கதர் சட்டையினர் கூறுகின்றனர். ஆனால், ஒரு கட்சிக்கே 30 தொகுதிகளை ஒதுக்கிகிட்டா எப்படி என்ற மோடில் திமுக இருக்கிறதாம்.

News August 25, 2025

மூலிகை: வெற்றிலையின் மகத்துவம் அறியுங்கள்

image

➤தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வெற்றிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து தடவினால், காயம் குணமாகும்.
➤வெறும் வாயில் வெற்றிலையை மென்று வந்தால், பல் சொத்தையாவது தவிர்க்கப்படும்.
➤வெற்றிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் கலந்து உடலில் தடவினால், தோல் பிரச்னைகள் குணமாகும்.
➤வெற்றிலையை மிளகுடன் சேர்த்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் அழற்சி, செரிமானக் கோளாறு போன்றவை குணமாகும்.

News August 25, 2025

பாலைய்யாவுக்கு கிடைத்த World Book of Records அங்கீகாரம்!

image

இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, World Book of Records UK, Gold Edition-ல் நடிகர் பாலகிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். தன்னுடைய அதிரடி மாஸ் ஆக்சன் காட்சிகளின் மூலம் பரீட்சயமான பாலைய்யா தான், இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் தெலுங்கு நடிகர். 1974-ல் ‘தட்டம்மா கலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், தற்போது வரை 160 படங்களில் நடித்துள்ளார்.

News August 25, 2025

கடவுள் ராமன் குறித்து வன்னி அரசு சர்ச்சை பேச்சு

image

இந்து கடவுள் ராமன் பற்றிய விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. ராமனும், ராமதாஸும் வேறு வேறல்ல, கருத்தியல் ரீதியாக இருவரும் ஒன்றே; பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன், பார்ப்பன கொள்கைகளுக்காக படுகொலை செய்ய தூண்டுபவர் ராமதாஸ் என சர்ச்சையாக பேசியுள்ளார். மேலும், தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!