News October 14, 2024

ஜலதோஷத்தை விரட்டி அடிக்கும் வெற்றிலை தேநீர்

image

மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் வெற்றிலை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரு வெற்றிலை இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான வெற்றிலை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 14, 2024

நவ. 23 சென்னை திரும்புகிறார் அண்ணாமலை

image

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நவ. 23ஆம் தேதி சென்னை திரும்புகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் 3 மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க ஆக. 27ஆம் தேதி அவர் லண்டன் சென்றார். படிப்பு முடிந்து சென்னை திரும்பும் அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படிப்புக்கான சான்றிதழ் பெற மீண்டும் லண்டன் செல்கிறார். சென்னை திரும்பியதும் அவரது அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

News October 14, 2024

விளையாட்டு துளிகள்

image

➤டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக்: திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் 2ஆவது முறையாக கோப்பை வென்றது. ➤ஏசியான் டேபிள் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் ஆயிஹா – சுதிர்தா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. ➤மைசூரு ஓபன் ITF டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீவல்லி ராஷ்மிகா 2ஆவது இடம்பிடித்தார். ➤IPL 2025: MI அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டார்.

News October 14, 2024

கூப்பன் மூலம் பணம் தர அரசு திட்டம்!

image

PM-ன் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன் பெறுவோர் மானியத்தை, பணமாக்கி பயன்படுத்தும் வகையில், கூப்பன்களாக கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிக்கடன் வாயிலாக வீடு வாங்குவோருக்கு வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இத்தொகையை பெற வீடு வாங்கி ஓராண்டு வரை மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், இத்தொகையை பணமாக்கக் கூடிய கூப்பன்களாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News October 14, 2024

எல்லாம் ரெடியா இருக்கா..? முதல்வர் ஆலோசனை

image

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. வடக்கிழக்கு பருவமழை அடுத்த சில நாள்களில் தொடங்கவுள்ளது. முன்னதாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறைசார் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

News October 14, 2024

சிவகார்த்திகேயன் விழாவில் சிம்பு?

image

‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்.18ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சிம்புவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 14, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤பாகிஸ்தானில் நிலத்தகராறு காரணமாக இரு பழங்குடியின குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். ➤பிரேசிலில் ஏற்பட்ட புயல் & கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 14 லட்சம் பேர் இருளில் தவிக்கின்றனர். ➤மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் MLF தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-இசா வுல்ட் யஹியா கொல்லப்பட்டார். ➤ஸ்காட்லாந்து முன்னாள் பிரதமர் அலெக்ஸ் சால்மண்ட் மாரடைப்பால் உயிரிழந்தார்.

News October 14, 2024

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

image

வெந்நீர் குடிப்பதால் நம் உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் விவரம் *கிட்னி, கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது *சைனஸ் பிரச்னையில் இருந்து காக்கிறது. *செரிமான ஆற்றலை கூட்டுகிறது. *நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. *இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. *சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. *உணவுக்குழாய் தசை தளராமையைப் போக்குகிறது.

News October 14, 2024

பாக். வெற்றியில் இந்தியாவின் அரையிறுதி கனவு

image

ICC WC T20யில் இன்று நடைபெறும் PAK-NZ அணிகளிடையேயான, போட்டியின் முடிவே இந்திய அணியின் SF கனவை நனவாக்க போகிறது. இன்று PAK அணி வெற்றி பெற்றால் IND, PAK அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது head to head-ல் IND அணி, PAK அணியை வீழ்த்தியுள்ளதால் எளிதாக SF-க்கு செல்லும். மாறாக NZ அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று SF செல்வார்களா நமது சிங்கப்பெண்கள்?

News October 14, 2024

ராகு-கேது தோஷம் போக்கும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்

image

1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலம் தூத்துக்குடி கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில். தேவர்களுக்குப் பரப்பிரம்மத்தை ஈசன் உபதேசித்ததாகக் கூறப்படும் இத்தலத்திற்கு உக்கிர பாண்டியர் கற்றளி கோயில் எழுப்பித்ததாக வரலாறு கூறுகிறது. இத்தலத்திற்கு ஜென்ம நட்சத்திர நாளில் வந்து ஞானாம்பிகை சமேத ஹஸ்தீஸ்வரருக்கு 11 வகை அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்கினால் ராகு – கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!