India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (அக். 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
திமுக அரசை கண்டித்து 3 நகரங்களில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டங்கள்
ஒத்தி வைக்கப்படுவதாக பாமக அறிவித்துள்ளது. திமுக அரசைக் கண்டித்து வருகிற 17ஆம் தேதி வடலூர், 20ஆம் தேதி திண்டிவனம், 26ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என பாமக அறிவித்திருந்தது. இந்நிலையில், பருவமழை காரணமாக அக்கூட்டங்கள் டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர், இந்தியின் டாப் ஹீரோவான அமீர் கானை வைத்து புதிய படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதை குறித்து அமீர்கானிடம் லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததாகவும், அமீர்கான் ஓகே சொன்னதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது.
இன்று (அக்.15) காலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. 1) இடி மின்னலுடன் மழை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி. 2) லேசான மழை: கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல்.
1542: முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்தார்.
1815: நெப்போலியன் போனாபார்ட் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார்.
1918: சீரடி சாய்பாபா மறைந்தார்.
1931: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தார்.
1935: டாடா நிறுவனம் முதல் விமான சேவையை தொடங்கியது.
சர்வதேச மாணவர்கள் தினம்
சர்வதேச கை தூய்மை தினம்
ரஞ்சி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203/10 ரன்களும், தமிழ்நாடு அணி 367/10 ரன்களும் எடுத்திருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. TN அணியில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 82, ஜெகதீசன் 100 ரன்கள் எடுத்தனர்.
மின் சேவைகள் மற்றும் தடை குறித்து, 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 மொபைல் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது மின்சேவைகள் தடைபட்டாலோ, மின்தடைகள் ஏற்பட்டாலோ இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுள்ளது.
சென்னையில் மழை பாதிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரவில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை சுமார் 5 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் மழை பாதிப்புகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதேபோல், மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்கின்றனர்.
இன்று (அக். 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அஸ்வின், ஜடேஜாவை சமாளிப்பது கஷ்டம் என நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார். இந்தியாவில் IND அணியை வீழ்த்துவதும், அவர்களை எதிர்த்துப் போராடுவது சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியை பற்றி நியூசிலாந்து அணி அதிகம் சிந்திக்காது என்பதால், இந்தியாவை வீழ்த்துவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமான டெஸ்ட் தொடர் அக்.16இல் பெங்களுரூவில் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.