India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் இரண்டாவது இடத்தையும், இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை- K.N.நேரு, தேனி – பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – எ.வ.வேலு, தென்காசி – KKSSR, குமரி – தங்கம் தென்னரசு, கோவை – செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் கடந்த SEP-ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், உயிரோடு இருப்பதாக இஸ்ரேல் ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கத்தார் நாட்டுடன் ரகசிய தகவல்தொடர்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், சர்வதேச எதிர்ப்பை மீறி காஸா, லெபனான் மீது தாக்குதலை தொடர ஒரு பொய் காரணத்தை ஏற்படுத்தவே, இஸ்ரேல் இப்படி தவறான தகவலை பரப்புவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது ODI போட்டியில் தென்னாப்ரிக்க அணிக்காக பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி ஃபீல்டிக் செய்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடும் வெப்பத்தால் வீரர்கள் சோர்வடைந்த நிலையில், அவர் Substituteஆக களம் இறங்கினார். ஆனால், 46.1 ஓவரில் 215 ரன்களில் ஆல்அவுட் ஆனதால், 69 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஆப்பிரிக்க காண்டாமிருகம் மட்டுமே கருப்பு நிறத்தில் பாலை தருகிறது. இதன் பாலில் 0.02% மட்டுமே கொழுப்பு உள்ளது. இவைகளால் ஒருமுறை ஒரு குட்டியை மட்டுமே ஈன முடியும். கருப்பு காண்டாமிருகங்களால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். ஓராண்டுக்கும் மேலாக அவை கர்ப்பமாக இருக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு MH அரசு ₹2 கோடி பரிசுத் தொகை வழங்கியது. மேலும், அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால், இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தனது மகனுக்கு ₹5 கோடி பரிசு வழங்க வேண்டும் எனவும், எளிதாக பயிற்சிக்கு செல்லும் வகையில் பாலேவாடி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு வீடு வாங்கி கொடுக்கவும் அவரது தந்தை சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
2025-26 கல்வியாண்டு முதல் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, ICSE, ISC பாடமுறையில் பயிலும் +1, +2 மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், AI படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தேசிய கல்விக் கொள்கை- 2020ன் படி இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம், 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாம்சங் ஊழியர்களின் போராட்டம் குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக திராவிட மாடல் அரசு செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த எந்த அரசும் நீடித்ததில்லை எனவும், நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு துணை நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹரியானாவில் காங்., ஆட்சியைப் பிடிக்கும்; ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், ஹரியானாவில் பாஜக 44, காங்., 40 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் காங்., கூட்டணி 49, பாஜக 22, மற்றவை 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதன் மூலம் கருத்துக்கணிப்பு பொய்த்து போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.வி.கணேசன், த.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளர்களின் பிரதிநிதி குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், CITU சங்க நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லாததால், அந்த தொழிற்சங்கம் மட்டும் வேலைநிறுத்தத்தை தொடர்கிறது.
Sorry, no posts matched your criteria.