News July 9, 2025

கோயில் நிதியில் கல்லூரியா? இபிஎஸுக்கு சேகர்பாபு பதிலடி

image

அறியாமை இருளில் இபிஎஸ் மூழ்கியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். கோயில் நிதியை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுவதாக கோவை பிரச்சாரத்தில் <<17000758>>இபிஎஸ் குற்றம்சாட்டியதற்கு<<>> சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வரலாறு தெரியாமல் இபிஎஸ் பேசிவருவதாகவும் சாடியுள்ளார்.

News July 9, 2025

வீட்டை காலி செய்ய வந்த அதிகாரி.. இறந்து கிடந்த நடிகை

image

பாக்., <<17004189>>நடிகை Humaira Asghar <<>>மரணம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டுக்கு ஓராண்டாக பணம் கொடுக்காததால் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, நடிகையை வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் வந்தபோது துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் சடலமாக கிடந்தார். 15 நாளுக்கு முன்பு இறந்தது தெரிய வந்தது.

News July 9, 2025

ஆப்பிள் COO பதவியேற்கும் இந்தியர்

image

கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்பட உலகின் டாப் டெக் நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். தற்போது Apple நிறுவன தலைமை இயக்க அதிகாரியாக(COO), இந்திய வம்சாவளி சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 1966-ல் உ.பி.,யில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்று பின்னர் USA-ல் குடியேறினார். படிப்படியாக உயர்ந்த அவரை புத்திக்கூர்மை உடையவர் என CEO டிம் குக் பாராட்டியுள்ளார்.

News July 9, 2025

இந்த ஹீரோ யார் தெரிகிறதா?

image

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தற்போது ஹேமந்த் ராவ் இயக்கும் ‘666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவராஜ்குமாரின் லுக் எப்படி இருக்கும் என படக்குழு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. இதில் கையில் கன்னுடன், சீரியசாக தெரியும் அவரை பார்க்க அடையாளம் தெரியவில்லை. இதற்கிடையே சிவண்ணாவின் லுக்கை பார்த்தீங்களா என ரசிகர்கள் இந்த போட்டோவை டிரெண்ட் செய்கின்றனர். லுக் எப்படி?

News July 9, 2025

ஜெ. தம்பியாக நான் அரசியல் செய்தவன்: திருமாவளவன்

image

அதிமுக தோழமை கட்சி என்பதால்தான் கூட்டணி குறித்து விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக ஒரு பொருந்தா கூட்டணி என திருமா கூறியதற்கு, ‘எங்கள் கூட்டணி பற்றிக் கூற அவர் யார்?’ என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அதற்கு பதிலளித்த திருமா, பாஜகவால் ADMK பாதிக்கப்படக்கூடாது என்றார். மேலும், தான் ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கே தெரியும் என்றார்.

News July 9, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,000-க்கும், சவரன் ₹72,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.

News July 9, 2025

ரஷ்ய அமைச்சர் தற்கொலை.. விசாரணைக்கு பயந்தாரா?

image

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் Roman V. Starovoyt தற்கொலை செய்தது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சராகும் முன்பு குர்ஸ்க் பிராந்திய ஆளுநராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த நிதிமுறைகேடு குறித்து விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News July 9, 2025

காரைக்காலில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

image

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பிராந்தியத்தில் நாளை மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை அங்கு செயல்படாது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

டெஸ்ட் தரவரிசை: மேல ஏறி வரும் சுப்மன் கில்!

image

ENG பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 2-வது இடத்தில் ENG-ன் ஜோ ரூட், 3-வது இடத்தில் NZ-ன் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். அதே நேரத்தில், இந்திய கேப்டன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை(807 புள்ளிகள்) பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் உள்ளனர்.

News July 9, 2025

IAS என்றால் கோர்ட்டை விட மேலானவரா? நீதிபதி கேள்வி

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நிறுத்திவைக்க கோரி அவர் HC-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, IAS அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். கோர்ட்டின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா என்று வினவிய அவர், ஆணையரை நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!