News October 9, 2024

ICC WC T20: நியூசி., வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

image

ஐசிசி மகளிர் டி20 போட்டியில் ஆஸ்தி., அணிக்கு எதிரான போட்டியில் நியூசி., அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்தி., அணி 20 ஓவர்கள் முடிவில் 148/8 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசி., அணி ஆஸ்தி., அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 88/10 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ஆஸ்தி., அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

News October 9, 2024

பாட்டுப் போடுவதில் பஞ்சாயத்து.. ஒருவர் கொலை

image

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பாட்டுப் போடுவதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மணமக்களுக்கு பிடித்த பாடலை போடாமல், மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடலை போட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையில் பெண் வீட்டாருக்கு நெருக்கமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் திருமணம் சுமூகமாக நடந்துள்ளது.

News October 9, 2024

ராசி பலன்கள் (09-10-2024)

image

◙மேஷம் – பிரயாணம்
◙ரிஷபம் – செலவு
◙மிதுனம் – அமைதி
◙கடகம் – சிந்தனை
◙சிம்மம் – பாராட்டு
◙கன்னி – நன்மை
◙துலாம் – சோதனை
◙விருச்சிகம் – ஆக்கம்
◙துனுசு – சாதனை ◙மகரம் – பேராசை
◙கும்பம் – நஷ்டம் ◙மீனம் – சாந்தம்

News October 8, 2024

ஆண் – பெண் SEX உறவு இனி இருக்காது: ஆய்வு

image

2050-க்குள், ஆண் – பெண் உறவை விட, Robots உடனான sex சாதாரண ஒன்றாக மாறிவிடும் என Futurologist இயான் பியர்சன் கணித்துள்ளார். Robotics, AI இணைத்து உருவாக்கப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் sex robotகள், 2025-க்குள் பணக்கார வீடுகளில் வரத் தொடங்கிவிடும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் பெண்கள் sex-க்கு ஆண்களை தவிர்த்து, Robots-ஐ விரும்பும் நிலை ஏற்படும் என்கிறார். இது மனிதகுலத்துக்கு நல்ல அறிகுறியா?

News October 8, 2024

ஓடிடிக்கு வருகிறது நயன்தாரா திருமண வீடியோ

image

இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடிக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. கடந்த 2 வருடங்களாக இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விரைவில் இந்த திருமண வீடியோவை வெளியிட உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய டாகுமெண்டரி படமாக வெளியாக உள்ளது.

News October 8, 2024

பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்திய அணி

image

சர்வதேச T20 போட்டிகளில் அதிக வீரர்களை அறிமுகப்படுத்திய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இதுவரை பாகிஸ்தான் 116 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா 117 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான T20 போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் அறிமுகமானபோது இந்தியா இந்த சாதனையை படைத்தது. AUS 111, SL 108, SA 107, ENG 104, NZ 103 வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

News October 8, 2024

EMIS தளத்தில் மதிப்பெண் விவரங்களை பதிவேற்ற ஆணை

image

6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களின், முதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், OCT 15க்குள் இது தொடர்பான அனைத்து பணிகளை செய்து முடிக்கவும், 6-8ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்து பணிகளை துரித்தப்படுத்துமாறும் HMகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 8, 2024

JOB: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அக்.20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் <>rrbapply.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னதாக அக்.13 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

News October 8, 2024

இந்த வாரம் OTTயில் வெளியாகும் படங்கள்

image

அக்டோபர் 11ஆம் தேதி 4 படங்கள் OTTயில் வெளியாக உள்ளன. சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாரி செல்வராஜின் ‘வாழை’, ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ ஆகிய படங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும், விதார்த் நடிப்பில் வெளியான ‘லாந்தர்’ படம் ஆஹா OTT தளத்திலும், யாஷிகா ஆனந்தின் ‘படிக்காத பக்கங்கள்’ சிம்பிலி சவுத் தளத்திலும் வெளியாகிறது. இதில் உங்கள் சாய்ஸ் எந்த படம்?

News October 8, 2024

ஹரியானாவில் வரலாற்று வெற்றி: PM மோடி

image

ஹரியானாவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு PM மோடி நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், நல்லாட்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், BJPயின் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் அறிந்ததன் விளைவுதான் இந்த வரலாற்று வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். ஹரியானாவில் BJP, தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

error: Content is protected !!