News October 8, 2024

அதிமுக MLAவின் கட்சி பதவி பறிப்பு.. EPS அறிவிப்பு

image

அதிமுக அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் MLA தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலில் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. இதனால், அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக EPS அறிவித்துள்ளார்.

News October 8, 2024

CBSE தேர்வு தேதி எப்போது வெளியாகும்?

image

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளை டிசம்பரில் CBSE அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகளை நடத்த CBSE திட்டமிட்டுள்ளது. இறுதித் தேர்வுகளுக்கான மாதிரி தாள்களை cbseacademic.nic.in-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

News October 8, 2024

இந்திய விமானப்படையின் சாதனைகள்

image

* பாகிஸ்தான் உடனான நான்கு போர்களில் 1947-1948, 1965, 1971 (வ.தேச போர்), மற்றும் 1999 (கார்கில் போர்), நம் வான்படை சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை விரட்டியுள்ளது.
* 1961-ல் கோவா இணைப்புக்கும் பக்கபலமாக உதவியது.
* சீனாவுடனான போரில் ராணுவத்துக்கு தேவையான உதவிகளை செய்தது.
* 1984-ல் சியாச்சின் பகுதியை நம் படைகள் கைப்பற்ற உதவியது.

News October 8, 2024

தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம்

image

சொத்து வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், குடிநீர், கழிவுநீர் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

News October 8, 2024

BREAKING: வினேஷ் போகத் வெற்றி

image

ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் இரண்டாவது இடத்தையும், இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

News October 8, 2024

தமிழ்நாட்டில் இனி எல்லாமே வளர்ச்சி தான்: முதல்வர்

image

வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை- K.N.நேரு, தேனி – பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – எ.வ.வேலு, தென்காசி – KKSSR, குமரி – தங்கம் தென்னரசு, கோவை – செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News October 8, 2024

ஹமாஸ் தலைவர் சின்வார் உயிரோடு இருக்கிறார்?

image

இஸ்ரேல் தாக்குதலில் கடந்த SEP-ல் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், உயிரோடு இருப்பதாக இஸ்ரேல் ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கத்தார் நாட்டுடன் ரகசிய தகவல்தொடர்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், சர்வதேச எதிர்ப்பை மீறி காஸா, லெபனான் மீது தாக்குதலை தொடர ஒரு பொய் காரணத்தை ஏற்படுத்தவே, இஸ்ரேல் இப்படி தவறான தகவலை பரப்புவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

News October 8, 2024

ஃபீல்டிங் செய்த பேட்டிங் பயிற்சியாளர்!

image

அயர்லாந்து அணிக்கு எதிரான 3ஆவது ODI போட்டியில் தென்னாப்ரிக்க அணிக்காக பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி ஃபீல்டிக் செய்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடும் வெப்பத்தால் வீரர்கள் சோர்வடைந்த நிலையில், அவர் Substituteஆக களம் இறங்கினார். ஆனால், 46.1 ஓவரில் 215 ரன்களில் ஆல்அவுட் ஆனதால், 69 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

News October 8, 2024

கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் விலங்கு

image

உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் ஆப்பிரிக்க காண்டாமிருகம் மட்டுமே கருப்பு நிறத்தில் பாலை தருகிறது. இதன் பாலில் 0.02% மட்டுமே கொழுப்பு உள்ளது. இவைகளால் ஒருமுறை ஒரு குட்டியை மட்டுமே ஈன முடியும். கருப்பு காண்டாமிருகங்களால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். ஓராண்டுக்கும் மேலாக அவை கர்ப்பமாக இருக்கும்.

News October 8, 2024

பதக்கம் வென்ற மகனுக்கு ₹5 கோடி + வீடு வேணும்: தந்தை

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு MH அரசு ₹2 கோடி பரிசுத் தொகை வழங்கியது. மேலும், அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால், இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தனது மகனுக்கு ₹5 கோடி பரிசு வழங்க வேண்டும் எனவும், எளிதாக பயிற்சிக்கு செல்லும் வகையில் பாலேவாடி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒரு வீடு வாங்கி கொடுக்கவும் அவரது தந்தை சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!